அபிநந்தனை பெருமைப்படுத்திய பிசிசிஐ! வைரலாகும் ஜெர்சி!!
இந்திய விமானி அபிநந்தன் நேற்று தாயகம் திரும்பியதை அடுத்து, அவர் பெயர் பதித்த ஜெர்சியை பிசிசிஐ சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது.
இந்திய விமானி அபிநந்தன் நேற்று தாயகம் திரும்பியதை அடுத்து, அவர் பெயர் பதித்த ஜெர்சியை பிசிசிஐ சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14- ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தான் விமானம் எப்16 இந்தியாவின் வான் எல்லையில் பறந்தது. அவர்களை பின்தொடர்ந்து துரத்தி இந்திய மிக் 21 ரக விமானங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் பாகிஸ்தான் விமானத்தை விழ்த்தியது. பின்னர் திரும்பும் வழியில் இந்திய விமானத்தை பாகிஸ்தான் தாக்கியது. அதன்மூலம் அந்த விமானத்தில் இருந்த அபிநந்தனின் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டார். மற்ற ஐந்து மிக் விமானங்கள் பத்திரமாக நாடு திரும்பியது.
ஜெனிவா போர்முறை ஒப்பந்தங்களின்படி கைது செய்யப்படும் போர் கைதிகளை திருப்ப சொந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது விதி. அபிநந்தனை விடுவிக்கக் கோரி உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றது. இந்தியாவும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் விதிமுறைப்படி பிடிபட்ட கைதிகளை விடுவிக்க வேண்டும். எனவே பாகிஸ்தான் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் விதிக்கு கட்டுப்பட்டு அபிநந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தது. அபிநந்தனை பாதுகாப்பாக விடுவிக்க வேண்டும் என்று உலக நாடுகளும் வலியுறுத்தியதோடு, பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
இதன்மூலம் பின்வாங்கிய பாகிஸ்தான், அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கிய, நமது விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.
அந்த வகையில் இரவு 9.17 மணிக்கு, அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். வாகா எல்லையில் அவரை விமானப்படை அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளும் வரவேற்று அழைத்து சென்றனர். நாடு முழுவதும் மக்கள் அவரது வருகையை கொண்டாடினர்.
இந்நிலையில் அபிநந்தனை பெருமைப்படுத்தும் விதமாக, அவரது பெயருடன் 1-ம் எண் அச்சிடப்பட்ட ஜெர்சியை, பிசிசிஐ சமூக வலைதளத்தில் பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளது.