இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளு இந்திய கிரிக்கெட் அணிக்கு மதிய உணவின் போது மாட்டிறைச்சி வழங்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 


இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடேயேயான இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 9 ஆம் நாள் துவங்குவதாக இருந்தது. ஆனால் மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் இரண்டாம் நாள் முதல் ஆட்டம் துவங்கியது.



இப்போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு மதிய உணவின் போது உணவுப்பட்டியலில் மாட்டிறைச்சி இடம்பெற்றதாக BCCI தெரிவித்தது. இதனையடுத்து இந்த தகவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.