பிரபலமான ரியாலிட்டி ஷோ, பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இன்று அதன் 59 வது நாளில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. இந்த போட்டியில் கடுமையான போட்டியாளர் என்ற விமர்சனம் பாலாஜிக்கு உண்டு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் இன்று பாலாஜியின் (Balaji Murugadoss) பிறந்தநாளை முன்னிட்டு பிக்பாஸ் அவருக்கு கேக் அனுப்பியுள்ளார். தனது பிறந்தநாளின் போது அவர் மிகவும் நெகழ்ச்சி அடைந்து லேசான கண்ணீருடன், ‘இந்த பிக்பாஸ் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, நான் கொஞ்சம் கோபமாக தான் இருப்பேன். ஆனால் உடனே நான் எல்லாவற்றையும் மறந்து விடுவேன். ஒருவேளை நான் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெறித்த மூன்றாவது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. 



ALSO READ | நம்பர் 1 பதவிக்கு அடித்துக்கொள்ளும் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்! புரோமோ வீடியோ


முன்னதாக முதல் இரண்டு புரோமோவில்,


முதல் புரோமோ முழு விவரம்:


பிக் பாஸ் (Bigg Boss Tamil) கால் சென்டர் பணியில் அனிதா (Anitha Sampath) ஆரம்பத்தில் இருந்தே ரியோவின் கோபத்தை தூண்டும் விதமாக கேள்விகள் கேட்டுக்கொண்டு இருந்தார். அவர் ஒரு தனிப்பட்ட வீரராக விளையாடுகிறாரா என்று அனிதா கேட்க, நான் தனியாக தான் விளையாடுகிறேன் என ரியோ பதில் கூறுகிறார். ஆனால் அப்படி தெரியவில்லை என அனிதா அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.


ALSO READ | அர்ச்சனாவிடம் நறுக்குன்னு கேள்வி கேட்ட ஆஜீத்


வெளியில் போடாத ஒரு முகமூடியை இங்கு போட்டு வந்திருக்கீங்க என குற்றம்ச்சாட்டி இருக்கும் அனிதா, 'நான் பாதி முகத்தை தான் காட்டுவேன், நீ எனக்கு trophy கொடு என சொன்னால் மக்கள் எப்படி கொடுப்பாங்க என நீங்கள் நினைக்கறீங்க" என ரியோவிடம் கேட்டிருக்கிறார். இந்த கேள்விகளை சிரித்துக்கொண்டே ரியோ (Rio Raj) கேட்டுக்கொண்டே இருக்க அனிதா மேலும் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தார். 



இதற்கிடையில் ரியோ பதில் சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் அனிதா இடையில் 'நான் கேட்கும் கேள்வியை புரிந்துகொண்டு நீங்கள் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்' என நினைப்பதாகவும் கூறி அவரை நக்கல் செய்தார். டாஸ்க் முடிந்து வெளியில் வந்த பிறகு அனிதாவிடம் 'Good call' என கூறி ரியோ பாராட்டுகிறார். ஆனால் உள்ளே சென்று சோம் உள்ளிட்டவர்களிடம் 'இது டாஸ்க் என்பதால் control ஆக இருந்தேன்' என தெரிவித்தார். 



ALSO READ | அனிதா கேட்ட அந்த கேள்வி; கோபத்தை கட்டுபடுத்தி பதில் கூறிய ரியோ- புரோமோ வீடியோ


இரண்டாவது புரோமோ:


ஒரு லக்சரி பட்ஜெட் பணியாக அறிமுகப்படுத்தப்பட்ட பணி முடிந்தது. போட்டியாளர்கள் தங்களை 1-13 முதல் மதிப்பிடுமாறு பிக் பாஸ் (Bigg Boss Tamil 4) கேட்டுக்கொள்கிறார். ஹவுஸ்மேட்ஸ் நம்பர் 1 பதவியை நோக்கமாகக் கொண்டதால் புதிய வாதங்கள் எழுகின்றன.



ALSO READ | "கான்செப்ட்டே இது தான்" : பிக் பாஸ் பாலா எடுத்த அதிரடி முடிவு!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR