"கான்செப்ட்டே இது தான்" : பிக் பாஸ் பாலா எடுத்த அதிரடி முடிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. 

Last Updated : Dec 1, 2020, 04:57 PM IST
"கான்செப்ட்டே இது தான்" : பிக் பாஸ் பாலா எடுத்த அதிரடி முடிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய கால்சென்டர் டாஸ்கில் ஆரி மற்றும் பாலாஜி போன் மூலம் உரையாடும் முதல் புரமோவை பார்த்தோம். தற்போது இரண்டாவது புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. 

முதலில் வெளியான புரோமோவில் பாலாஜி அடுக்கடுக்கான கேள்விகளை ஆரியிடம் கேட்கிறார். இந்த கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் ஆரி திணறும் காட்சிகள் உள்ளது. கால் ஆரம்பித்தவுடன் ’நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகர். ஆனால்  பிக் பாஸ் (Bigg Boss Tamil) வீட்டிற்கு வெளியே’ என்று ஆரம்பிக்கும் பாலாஜி (Balaji Murugadoss), ‘நான் யாரையும் காலி பண்ணி விளையாட மாட்டேன், எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விளையாடுவோம் என்று சொல்வீர்கள். ஆனால் ஆரி (AARIநீங்கள் யாரும் யாரையும் காலி பண்ணி விளையாடவில்லையா? என்று முதல் கேள்வியை பாலாஜி வைக்கிறார். 

ALSO READ | பிக் பாஸ் கால் சென்டர்: ஆரியின் பொறுமையை டெஸ்ட் செய்யும் பாலா! வீடியோ

அதன்பிறகு ’நான் கெட்டவன் என்று சொல்பவனை கூட நம்புவேன், நான் நல்லவன் என்று சொல்பவனை கூட நம்பலாம், ஆனால் நான் மட்டும் தான் நல்லவன் என்று சொல்றான் பாருங்க அவள் நம்பவே முடியாது’ என்று பாலாஜி கூறுகிறார். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஆரி தத்தளிக்கும் காட்சி புரோமோவில் தென்படுகிறது. 

ALSO READ | பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறபோகும் போட்டியாளர் இவர்தான்....

இந்நிலையில் தற்போது இரண்டாவது புரோமோவில், பாலாவின் தந்திரத்தை புரிந்து கொண்டதாக சனம் மற்றும் ஆஜித்திடம் ஆரி விளக்குகிறார். என்னைப்பற்றிய நெகட்டிவ் கருத்துக்களை மட்டுமே எடுத்து வைத்தார்.  இதன் மூலம் தன்னுடைய கருத்து மட்டும் வெளியே தெரிய வேண்டும், அதுவும் எனக்கு எதிராக அந்த கருத்துக்கள் இருக்க வேண்டும் என்பதுதான் பாலாஜியின் நோக்கம் என்று சனம் மற்றும் ஆஜித்திடம் ஆரி கூறினார். 

இதற்கிடையில் அர்ச்சனா மற்றும் நிஷாவிடம் இது குறித்து கூறிய பாலாஜி, ஆடியன்ஸ்களுக்கு எனக்கும் அவருக்கும் இடையே என்ன சண்டை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்காக நான் இந்த டாஸ்க்கை பயன்படுத்திக் கொண்டேன் என்றார். 

ALSO READ | பிக் பாஸ் 4 இல் இந்த வாரம் நாமினேட் ஆன 4 போட்டியாளர்கள் இவர்களே!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News