உயிரை விலை கேட்கும் Bird Box challenge பற்றி தெரியுமா?...
ஐஸ் பக்கெட் சாலன்ச், கிகி சேலன்ச் ஆகியவற்றை தொடர்ந்து தற்போது வைரலாகி வருவது Bird Box challenge!
ஐஸ் பக்கெட் சாலன்ச், கிகி சேலன்ச் ஆகியவற்றை தொடர்ந்து தற்போது வைரலாகி வருவது Bird Box challenge!
கண்ணை கட்டிக்கொண்டு பயணம் மேற்கொள்ளும் கொடிய சவாலை மேற்கொள்ளும் இந்த Bird Box challenge, பிரபல ஆன்லைன் வீடியோ தளத்தில் வெளியான Bird Box தொடரின் காரணமாக பிரபலமாகியுள்ளது.
உயிர் கொல்லி பேயிடம் இருந்து தப்பிக்க தாய், அவரது குழந்தைகள் தங்கள் கண்களை கட்டிக்கொண்டு பயணத்தை மேற்கொள்ளும் கதை களத்தினை கொண்டு வெளியான இந்த இணைய தொடரின் அடிப்படையில் தற்போது ரசிகர்கள் இந்த சவாலினை அறிமுகம் செய்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக இணையத்தில் சவால் விட்டு, அந்த சவாலினை பிரபலம் அடைய செய்வது வாடிக்கையாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது இந்த Bird Box challenge-னை மக்கள் அறிமுகம் செய்துவைத்துள்ளனர்.
கண்களை கட்டிக்கொண்டு ஓடும் இந்த சவாலினை மக்கள் வீட்டில் மேற்கொள்ளும் போதே பல விபத்துகளை சந்திக்கின்றனர். இந்நிலையில் சிலர் இந்த விஷப்பறிட்சையினை வாகனங்கள் நிறைந்த சாலையில் மேற்கொண்டு வருகின்றனர். இது அவர்களின் உயிருக்கே ஆபத்தாய் அமைகிறது...