`Anti-sex` beds: டோக்கியோ ஒலிம்பிக்கில் `பாலியல் எதிர்ப்பு` படுக்கைகள்!
டோக்கியோவில், ஒலிம்பிக் கிராமத்தில் விளையாட்டு வீரர்கள் உறங்குவதற்கான படுக்கை `பாலியல் எதிர்ப்பு` படுக்கையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று உலகில் பல அடிப்படை விஷயங்களையே மாற்றிவிட்டன. அதில் விளையாட்டு திறமையை நிரூபிக்கும் ஒலிம்பிக் போட்டிகளும் தப்பவில்லை. சமூக இடைவெளியை கடைபிடிப்பது கொரோனா தொற்றை தவிர்க்கும் என்பதால், டோக்கியோ ஒலிம்பிக் அதை ஊக்குவிக்கிறது.
ஜப்பானில் COVID-19 வழக்குகள் அதிகரித்துள்ளதால் சமூக இடைவெளியை பராமரிக்கும் யோசனையை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் அமைப்பாளர்கள் ஊக்குவித்து வருகின்றனர். ஒலிம்பிக் கிராமத்தை விட்டு விளையாட்டு வீரர்கள் வெளியில் செல்லும்போது ஆணுறைகள் (condoms) கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, விளையாட்டு வீரர்கள் உறங்குவதற்கான படுக்கையை 'பாலியல் எதிர்ப்பு' படுக்கையாக ('anti-sex' beds) வடிவமைத்துள்ளனர், இது விளையாட்டு வீரர்கள் உடலுறவு கொள்வதை தவிர்ப்பதற்கான முன்யோசனையாம்…
Also Read | இந்த மணல்கோட்டையை எந்த அலையும் அடித்துச் செல்லாது
இந்த 'பாலியல் எதிர்ப்பு' படுக்கைகள் அட்டைகளை (cardboard) கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. அவை ஒரு நபரின் எடையை மட்டுமே தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக் கொள்வதற்காக டோக்கியோ சென்றிருக்கும் அமெரிக்க ஸ்ப்ரிண்டர் பால் செலிமோ (Paul Chelimo) இந்த வித்தியாசமான படுக்கையின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த செய்தி வைரலாகிறது.
"டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் இருக்கும் படுக்கைகள் அட்டைப் பெட்டியால் செய்யப்பட்டுள்ளது, இது விளையாட்டு வீரர்களிடையே நெருக்கத்தைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று தனது பதிவில் அவர் எழுதியுள்ளார்.
எடை தாங்காமால் படுக்கை உடைந்து விழுந்தால் தரையில் தூங்க வேண்டியிருக்கும் என்று அவர் கூறுகிறார். "தரையில் எப்படி தூங்குவது என்பதைப் பயிற்சி செய்யத் தொடங்கும் நேரம் இது. எடை தாங்காமால் படுக்கை உடைந்து விழுந்தால் தரையில் தூங்குவதற்கான அனுபவம் எனக்கு இல்லை. டோக்கியோவுக்குச் செல்வதில் ஏற்படும் கூடுதல் மன அழுத்தம் இது!" என்று அவர் டிவிட்டரில் செய்தி பதிவிட்டுள்ளார்.
நான்கு ஆணுறை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தள்ள டோக்கியோ 2020 இன் அமைப்பாளர்கள், ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள விளையாட்டு வீரர்களுக்காக 1,60,000 ஆணுறைகளை ஏற்பாடு செய்துள்ளனர்.
"ஆணுறைகளை விநியோகிப்பது விளையாட்டு வீரர்களின் கிராமத்தில் பயன்படுத்தப்படுவதற்காக அல்ல, போட்டிகளுக்குப் பிறகுக் விளையாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளுக்கு செல்லும்போது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக (HIV and AIDS) கொடுப்போம் " என்று அமைப்பாளர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
Also Read | Desi Ghost Rider: ஊஞ்சலாடும் சோளக்கொல்லை பொம்மை, பீதியில் நெட்டிசன்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR