உதிர்ந்துபோன தலைமுடி’ என்ற சொல் தமிழக அரசியலில் மிகவும் வைரலானது. உதிர்ந்து போன தலைமுடி என்பது ஒன்றுக்கும் உதவாதது, அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்ற பொருளில் உதிர்ந்து போன தலைமுடி பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், ஒரு வீடியோ இந்த வாதத்தையே புரட்டி போட்டுவிடும் போல இருக்கிறது. வித்தியாசமாக தோற்றமளிக்கும் முயற்சியில், 23 வயதான மெக்சிகன் ராப் பாடகர் (Mexican Rapper Dan Sur) தங்க சங்கிலிகளை அறுவை சிகிச்சை மூலம் தலையில் பொருத்தியிருக்கிறார். 


அதற்காக அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். ஆனால், தலைமுடியாக தங்க இழைகள் அல்ல, தங்கச் சங்கிலியை பொருத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். 


இந்த ராப் பாடகர், ஏப்ரல் மாதத்தில் வினோதமான அறுவை சிகிச்சையை செய்துக் கொண்டார். "தங்க முடியை" பொருத்திக் கொண்ட ராப் பாடகர் இன்ஸ்டாகிராமில் அதை பதிவிட்டார். தலைமுடியையே தங்க சங்கிலி பின்னலாக மாற்றிய முதல் மனிதர் இவர் தான். 




தலைமுடியை மட்டுமா இவர் தங்கமாக மாற்றியுள்ளார்? பற்களையும் தங்கமாக மாற்றிக் கொண்டார். இவர் தங்கப் பிரியராக இருக்கிறார். அவர் தனது இன்ஸ்டா பதிவில், தங்கக் கட்டிகளையும் கையில் வைத்துக் கொண்டிருக்கிறார்.


மற்றவர்களைப் போல தனது தலைமுடிக்கு சாயம் பூச விரும்பவில்லை என்றும், வித்தியாசமாக எதாவது செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.



"உண்மை என்னவென்றால், நான் வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்பினேன், எல்லோரும் தங்கள் தலைமுடிக்கு சாயம் பூசுகிறார்கள். நான் அதை பின்பற்ற விரும்பவில்லை. இப்போது நான் செய்ததை யாரும் நகலெடுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். இது என் முடி; தங்க முடி. மனித வரலாற்றில் தங்க முடி பொருத்தப்பட்ட முதல் ராப்பர் நான்தான்” என்று அவர் டிக்டோக் வீடியோவில் ஒன்றில் கூறினார்.


தங்க முடி வீடியோவையும் புகைப்படங்களையும் பார்க்கலாம்.


 


 


 



முன்னதாக, லில் உசி வெர்ட் (Lil Uzi Vert) 24 மில்லியன் டாலர் மதிப்புள்ள வைரத்தை தலையில் பொருத்தியிருக்கிறார். இருப்பினும், ஜூலையில் நடந்த ரோலிங் லவுட் இசை விழாவில் ஒரு ரசிகர் தனது முகத்தில் இருந்து விலைமதிப்பற்ற ரத்தினத்தை பறித்ததாக அவர் சமீபத்தில் கூறினார், ஆனால் அவர் கூட்டத்திற்குள் குதித்து அதை எடுத்துவிட்டதாக தெரிவித்தார்.


ALSO READ | செக்ஸ் பற்றி நியூசிலாந்து பிரதமர் அளித்த சுவாரஸ்யமான பதில்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR