Viral News: செக்ஸ் பற்றி நியூசிலாந்து பிரதமர் அளித்த சுவாரஸ்யமான பதில்..!!

நியூசிலாந்தின் பிரதமரிடம் செக்ஸ் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது, பிரதமர் இந்த சுவாரஸ்யமான பதிலை அளித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 10, 2021, 05:40 PM IST
  • PM ஆர்டெர்ன் ஒரு செய்தியாளர் சந்திப்பை அழைத்திருந்தார்.
  • பத்திரிகையாளர் திடீரென தர்மசங்கடமான கேள்வியைக் கேட்டார்.
  • பிரதமர் ஜசிந்தா அளித்த சுவாரஸ்யமான பதில் வைரலானது.
Viral News: செக்ஸ் பற்றி நியூசிலாந்து பிரதமர் அளித்த சுவாரஸ்யமான பதில்..!! title=

வெலிங்டன்: நியூசிலாந்தின் (New Zealand) பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern) நடத்திய ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் செக்ஸ் பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, ​​அவருக்கு ஒரு தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டு, திடீரென அவரது முகத்தின் நிறம் மாறியது. ஆனால், அவர் அதற்கு அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலானது

PM ஆர்டெர்ன் ஒரு செய்தியாளர் சந்திப்பை அழைத்திருந்தார். நியூசிலாந்தில் கொரோனா வைரஸைத் திறம்படத் தடுக்க பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் எடுத்த நடவடிக்கைகளுக்கு பரவலாக பாராட்டப்பட்டது. இதை அடுத்து, அவரது சாதனை பற்றி பேச பிரதமர் செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் மற்றும் நாட்டின் மருத்துவ இயக்குனர் ஜெனரல் டாக்டர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் ஆகியோர் நாட்டில் கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் கூறினர்.

ALSO READ | Work From Home பரிதாபங்கள்; கணவர் ஆபீஸ் வர அனுமதியுங்கள் என கெஞ்சும் மனைவி..!!

அதே பத்திரிகையாளர் சந்திப்பில், ஆக்லாந்து மருத்துவமனையில் நோயாளிக்கும், நோயாளியை காண வந்தவரும் உடல் உறவு கொண்டதாக எழுந்த குற்ற சாட்டு பற்றி குறிப்பிட்டு, உலகில் கொரானாவின் நிலைமையைக் கருத்தில் கொண்டு இவ்வாறு உடலுறவு கொள்வதால், கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதா என கேட்டார். இந்த கேள்வியினால், பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அதிர்ச்சியடைந்தாதோடு, உடனடியாக பதில் எதையும் சொல்ல முடியவில்லை. பின்னர் அவர் கூறிய பதில் சமூக ஊடகங்களில் வைரலானது.

பிரதமர் ஜசிந்தா அளித்த சுவாரஸ்யமான பதில்

PM ஆர்டெர்ன், 'கொரோனா வைரஸ் பரவல் இல்லாவிட்டாலும் கூட, மருத்துவமனையில் நோயாளியை பார்க்க வரும் போது, இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்று நினைக்கிறேன்' என பதிலளித்தார்

நியூசிலாந்து பிரதம மந்திரி ஜெசிந்தா ஆர்டெர்ன் நாட்டில் முதல் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட உடன், நாடு தழுவிய லாக்டவுனை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கடுமையான நடவடிக்கையில் விளைவாக நியூசிலாந்து கொரோனா வைரஸின் தீவிர பரவலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ALSO READ | Wine: ‘மது’ பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Trending News