தாடி வளர்த்தால் காதலிக்க மாட்டோம்... இளம்பெண்களின் வினோத போராட்டம் - வைரலாகும் வீடியோ
Bizarre Viral Video: தாடி வளர்ப்பவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 10க்கும் மேற்பட்ட பெண்கள் முகத்தில் ஒட்டு தாடியுடன் போராட்டம் நடத்தும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Instagram Bizarre Viral Video Latest: இணையத்தில் எப்போதுமே வினோதமான விஷயங்கள் அடிக்கடி வைரலாகும். அப்படி ஒரு வீடியோதான் தற்போது இளைஞர்கள் இடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது. X தளம் தொடங்கி வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து இடங்களிலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது, மத்திய பிரதேசம் தலைநகரில் இளம் பெண்கள் ஒன்றிணைந்து, தாடியே இல்லாமல் இருக்கும் பாய் பிரண்ட்களுக்கு ஆதாரவாக போராட்டம் நடத்தும் வீடியோதான் தற்போது வைரலாகிறது. படிக்கும்போதே குழப்புகிறதா... அப்படியென்றால் இதுகுறித்து தெளிவாக, விரிவாக தெரிந்துகொள்ள தொடர்ந்து வாசியுங்கள்...
அதாவது, ஆண்கள் தாடி வளர்க்க கூடாது என்பதற்காக சில பெண்கள் போராட்டம் நடத்துவது அந்த வீடியோவில் தெரிகிறது. அவர்கள் தொடர்ந்து பல்வேறு கோஷங்களை எழுப்பி வருகின்றனர். கைகளிலும் கோரிக்கை பலகைகளை ஏந்தி நிற்கின்றனர். "No Clean Shave, No Love" (தாடியை முழுமையாக எடுக்கவில்லை என்றால் காதல் இல்லை என அர்த்தம்), "Keep a beard or keep a girlfriend" (ஒன்று தாடி வைத்துக்கொள்ளுங்கள் இல்லையெனில் காதலியை வைத்துக்கொள்ளுங்கள் என பொருள்) இதுபோன்ற ஆங்கிலம் மற்றும் இந்தி வாசகங்கள் அடங்கிய பலகைகளை அவர்கள் கையில் வைத்து கோஷம் எழுப்புகின்றனர்.
ஒட்டு தாடியுடன் பெண்கள்
இந்த வீடியோ கடந்த சில நாள்களாகவே இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. இந்த வீடியோ பொதுவெளியில் ஒரு சாலையில் எடுக்கப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தங்களின் முகத்தில் ஒட்டுத்தாடியோடும், கைகளில் பலகைகளை வைத்துக்கொண்டு, கோஷங்களை எழுப்பியவாரும் பேரணி போல நடந்துசெல்வதை பார்த்த பொதுமக்கள் பலரும் அவர்களை வினோதமாக பார்த்தார்கள். பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், இளைஞர்களும் கூட அவர்களை வியந்து பார்த்தனர். பலரும் அவர்களின் செயலை கண்டு அடக்க முடியாத வகையில் சிரித்தனர். இவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.