ட்விட்டர் கணக்கில் தங்களது பெயரை ”காப்பாளர்” என மாற்றிக்கொண்ட பாஜக அமைச்சர்கள்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் ட்விட்டர் கணக்கில் தங்களது பெயரை 'Chowkidar Narendra Modi, Chowkidar Amit Shah' என மாற்றிக் கொண்டுள்ளார். நானும் காவலர்தான் என்ற தலைப்பில், சமூக வலைத்தளங்களில் நேற்று பிரச்சார வீடியோ ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார்.


இந்நிலையில், காவலர், காப்பாளர் எனப் பொருள்படும் Chowkidar வார்த்தையை சேர்த்து, ட்விட்டர் கணக்கில் தனது பெயரை 'Chowkidar Narendra Modi' என பிரதமர் மோடி மாற்றியுள்ளார். இதேபோல பாஜக தலைவர் அமித்ஷா (Chowkidar Amit Shah) மற்றும் மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல் (Chowkidar Piyush Goyal), ஜே.பி.நட்டா, ஹர்ஷவர்தன், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் ட்விட்டர் கணக்குகளில் தங்கள் பெயரின் முன்பு Chowkidar என்பதை சேர்த்துள்ளனர்.




ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காவலர் என்று சொல்லிக்கொள்பவர் ஒரு திருடர் எனப்பொருள்படும் வகையில், Chowkidar Chor Hai எனப் பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும், "உங்கள் சௌகிதார் உறுதியுடன் நிற்கிறார், தேசத்தைச் கைப்பற்றி வருகிறார், ஆனால் நான் தனியாக இல்லை, ஊழல், அழுக்கு, சமுதாயத் தீமைகள் அனைவருக்கும் சௌகீடர் உள்ளது, இந்தியாவின் முன்னேற்றத்திற்காக கடினமாக உழைக்கின்ற அனைவரும் சௌகிதார் ஆவார். இன்று, ஒவ்வொரு இந்தியரும் சொல்கிறார்கள்- #MainBhiChowkidar.