பாஜக MP-க்கு பாத பூஜை செய்து, அந்த நீரை தீர்த்தமாக பாஜக தொண்டர்கள் குடித்த விவகாரம் நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜார்கண்ட் மாநிலம் கொட்டாவில் நேற்று நடைப்பெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பாஜக MP நிஷ்கண்ட் துபே-யின் பாதத்தினை கழுவி அந்த நீரினை தீர்த்தமாக அக்கட்சியின் தொண்டர்கள் குடித்துள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.



இந்த சம்பவம் தொடர்பாக தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள MP நிஷ்கண்ட் நுபே பதிவிட்டுள்ளதாவது... பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றியதன் காரணமாக அப்பகுதி மக்கள் தனது பாதத்தினை கழுவி தீர்த்தமாய் குடித்தனர் என குறிப்பிட்டுள்ளார்.


இந்த பதிவினை கண்டு பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தாங்கள் என்ன கடவுளா, தங்களது பாதத்தை கழுவிய நீரை அனைவரும் பருகுவதற்கு என நேரடியாகவே பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தொண்டர்கள் ஆர்வகோளாரான விஷயங்களை செய்தாலும் அதனை கண்டித்து அவர்களை வழிநடத்த தலைவர்கள் முன்வரவேண்டாமா... அதுதானே தலைமைக்கு அழகு என சமூக வலைதளங்களில் சாடி வருகின்றனர்.



எனினும் இந்த கருத்துகளுக்கு சற்றும் அசராத MP நிஷ்கண்ட் துபே., தொண்டர்கள் அவ்வாறு செய்வதில் என்ன தவறு என மறுகேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவத்திற்கு அரசியல் சாயம் பூதசாதீர்கள், உங்களது விருந்தினரை பாதம் கழுவி வரவைப்பதில் தவறு என்ன இருக்கின்றது என கேள்வி எழுப்பியுள்ள அவர், இந்த மரபு ஆனது மஹாபாரத்தின் கதைகளில் இருந்தே பின்தொடரப்பட்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.