இணைய உலகம் ஆச்சரியங்களை மட்டுமல்ல, அதிர்ச்சிகளையும் அள்ளிக் கொடுக்கிறது. எனினும் சில வீடியோ அதிர்ச்சியை மட்டுமல்லாத பாடங்களையும் புகட்டுகிறது. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், பெங்களூருவின் போக்குவரத்து காவல்துறையின் இணை ஆணையர் டாக்டர் பி.ஆர்.ரவிகாந்தே கவுடா சமீபத்தில், மனம் பதற வைக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், பேருந்து ஒன்றின் சக்கரத்தின் கீழ் ஒருவர் தலை மாட்டிக் கொள்வதையும், ஆனால், அவர் அதிசயமாக சேதமில்லாமல் உயிர் பிழைத்ததையும் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீடியோவைப் பகிர்ந்து கொண்டுள்ள அவர், பைக் ஓட்டுபவர்களை "நல்ல தரமான ஐஎஸ்ஐ மார்க் ஹெல்மெட்" மட்டுமே பயன்படுத்துமாறு வலியுறுத்தினார். திகிலூட்டும் வீடியோவில், பைக்கில் சென்ற ஒருவர் பேருந்தின் சக்கரத்தில் அடியில் விழுந்த பிறகும் மரணத்தைத்தில் இருந்து தப்பித்ததைக் காணலாம். 19 வயதான அலெக்ஸ் சில்வா பெரஸ் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், ஒரு திருப்புமுனையில் இரு சக்கர வாகனத்தில் செல்வதையும், அப்போது எதிர் திசையில் இருந்து வரும் பேருந்தின் கீழ் வலதுபுறமாக விழுந்ததையும் வீடியோவில் காணலாம். தலையில் ஹெல்மெட் அணிந்திருந்ததால், திரு அலெக்ஸின் தலையில் சக்கரம் மோதினாலும், மயிரிழையில் உயிர் பிழைத்துள்ளார்


Viral Video: ஆமைக்கு ஆசையாய் ஊட்டி விடும் குரங்கு; இணையவாசிகளை கவர்ந்த க்யூட் வீடியோ


மனதை கலங்க வைக்கும் வீடியோவை கீழே காணலாம்:




 ​​திரு அலெக்ஸின் ஹெல்மெட் சக்கரத்தின் அடியில் சிக்கிக் கொண்டது. உடனே, பேருந்து ஓட்டுநர் உடனே துரிதமாக செயல்பட்டு, பேர்ந்தை பின்னேக்கி செலுத்துகிறார். ஹெல்மெட்டை விடுவிப்பதற்காக பேருந்து பின்னோக்கிச் சென்ற நிலையி, 19 வயது இளைஞனுக்கு உதவ மக்கள் கூடினர். இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பெங்களூரு போக்குவரத்து காவல்துறையும் (பிடிபி) ஹெல்மெட்களின் முக்கியத்துவம் குறித்த செய்தியைப் பகிர்ந்துள்ளது. வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் " என்று ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ரியோ டி ஜெனிரோவில் உள்ள பெல்ஃபோர்ட் ரோக்சோவில் திங்கள்கிழமை இந்த சம்பவம் நடந்ததாக உள்ளூர் ஊடகமான இஸ்டோ தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் திரு அலெக்ஸ் பெரிதும் காயமடையவில்லை. அவர் தனது குடும்பத்திற்கு பிரெட் வாங்க பேக்கரிக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​ஒரு வளைவில் பஸ் வந்து கொண்டிருந்ததை பார்த்த அவர், பைக்கை நிறுத்த முயன்றபோது, ​​தவறி பஸ்சின் அடியில் விழுந்தார்.இந்த பயங்கர விபத்தின் வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. “சிறந்த ஹெல்மெட் உங்கள் உயிரைக் காப்பாற்றும்" என்று ஒரு பயனர் கருத்து பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்


மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ