Viswasam படத்தில் இணையும் மற்றொரு பிரபலம்! யார் தெரியுமா?
![Viswasam படத்தில் இணையும் மற்றொரு பிரபலம்! யார் தெரியுமா? Viswasam படத்தில் இணையும் மற்றொரு பிரபலம்! யார் தெரியுமா?](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2018/04/07/128508-5446746.jpg?itok=bwkjUQRA)
நடித்த போஸ் வெங்கட் `விசுவாசம்` படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
நடிகர் அஜீத் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் விசுவாசம். தற்போது, விசுவாசம் படத்தில் நடித்துவரும் நடிகர்களின் பட்டியலானது தற்போது ஒவ்வொன்றாக வெளியானது.
இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க டி.இமான் முதன் முறையாக அஜீத் படத்திற்கு இசையமைக்கிறார். இதையடுத்து, நடிகர் அஜித்தின் விசுவாசம் படமானது வீரம் இரண்டாம் பாகத்தை போன்று இருக்கிறது என தகவல்கள் வெளியானது.
மேலும், இந்த படத்தில் நடிகர் அஜீத் வடசென்னை தமிழ் பேசி நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் இப்படத்தில் நகைச்சுவை நடிகர்களான தம்பி ராமையா மற்றும் ரோபோ சங்கர், யோகி பாபு ஆகியோர் நடிக்க உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியானது. அதுமட்டுமின்றி, இந்த படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியானது. அதில் ஒரு கதாபாத்திரத்தில் இளைஞராக நடிக்கிறாராம் நடிகர் அஜித்.
இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் முக்கயமான கதாபாத்திரல் நடிகர் போஸ் வெங்கட் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.