உலகில் இருக்கும் உயிரினங்களான மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்டவை மூச்சுவிடும். இதனைக் கண்களால் பார்த்திருக்கிறோம். ஆனால், பூமி மூச்சுவிடுவதை என்றாவது பார்த்திருக்கிறீர்களா?. பல அரிய அதிசயங்கள் இருக்கும் இந்த பூமியில் இதுவும் ஒரு அதியமாக உள்ளது. ஆனால் அதனை பெரும்பாலானவர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், உலகில் இருக்கும் அத்தனை அதியசங்களையும், நிகழ்வுகளையும் யாராலும் பார்க்க இயலாது. ஒரு சில விஷயங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டவை மட்டுமே பெரும்பாலானோர் பார்க்கும் வாய்ப்பு கிட்டுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: அஸ்ஸாமில் சாலையை ஹாய்யாக கடந்து சென்ற பெரிய்ய்ய்ய மலைப்பாம்பு..!!


அந்தவகையில் பூமி மூச்சுவிடும் வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவியுள்ளது. அந்த வீடியோவில், இயற்கை செழிப்பு நிறைந்த வனப்பகுதியில் மரங்கள் சூழ்ந்து இருக்கின்றன. அந்த இடத்தில் குறிப்பிட்ட நிலப்பரப்பு மட்டும் மேல்நோக்கி எழுந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன. பார்ப்பவர்களை அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது. முதன்முறையாக பார்க்கும் அனைவரும் இந்த வீடியோவை பார்த்தவுடன் பூமி மூச்சுவிடுமா? என நிச்சயமாக யோசிப்பார்கள். ஆனால், அங்கு தான் டிவிஸ்ட் இருக்கிறது.



பூமி மூச்சுவிடுகிறது என பார்ப்பவர்கள், உடனடியா கீழே சென்று கமெண்டை பார்த்தால் உண்மை தெரிந்துவிடும். இந்த வீடியோ எடுக்கப்பட்டது கனடாவின் குயூபெக் பகுதியில். ஆனால், பூமி அங்கு மூச்சுவிடவில்லை. அப்பகுதியில் வேகமாக வீசியக் காற்றில் மரங்கள் வேகமாக அசைந்தாடுகின்றன. அப்போது, மரத்தின் வேர்கள் மேலெழும்புகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பூமி மூச்சுவிடுகிறது என வீடியோவை பரப்பியுள்ளனர்.


மேலும் படிக்க | தலைமுடி கொடுத்தால் பஞ்சுமிட்டாய்! வைரலாகும் கடைக்காரின் செயல்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR