வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. இதில் வரும் செய்திகளும் வீடியோக்களும் நம்மை நம் கவலைகளை மறந்து சிரிக்க வைக்கின்றன, சில சிந்திக்கவும் வைக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்களின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் பல விதமான திருமண சடங்குகளையும், அவற்றில் நடக்கும் வினோதமான விஷயங்களையும் காண முடிகின்றது. நம் நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களை போல கொண்டாடப்படுகின்றன. திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது. பல உறவுகளும் நட்புகளும் சேர்ந்து மகிழ்ந்து அனுபவிக்கும் கோலாகலமான கொண்டாட்டமாக இது இருக்கின்றது.  சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம். 


சமீபத்திலும் மிக வித்தியாசமான ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. பொதுவாக திருமண நாளில், மணமகனும், மணமகளும் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் தங்கள் விசேஷ நாளை இன்னும் சிறப்பாக்க பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். ஆனால் இந்த வீடியோவில் மிக வினோதமான ஒரு காட்சியை காண முடிகின்றது. இதை பார்த்தால் நமக்கு ஆச்சரியமே மேலோங்குகிறது.


இதில் மணமேடையில் மணமகனும் மணமகளும் இருப்பதை காண முடிகின்றது. அப்போது மணப்பெண் தனது வருங்கால கணவருக்காக மேடையில் நடனமாடுகிறார். அதை பார்த்து அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மணமகளுக்கு தனது திருமணத்தால் கிடைத்துள்ள மகிழ்ச்சியை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. இதுமட்டுமின்றி மணமகன் மீது அவர் கொண்டுள்ள காதலும் இதில் தெரிகிறது.


மேலும் படிக்க | டயர் இல்லாத கார்.. ஆன எப்படி ஓடுது? வியக்க வைக்கும் வைரல் வீடியோ


ஆனால், மணமகனோ யாரும் எதிர்பாரத ரியாக்ஷனை கொடுக்கிறார். நடனமாடும் மணமகள் பக்கம் அவர் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அவர் நடனத்தில் முற்றிலும் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார். இதை பார்க்க அனைவருக்கும் மிக வினோதமாக உள்ளது. மணமகளின் நடனத்தால் அவர் மகிழ்வதற்கு பதிலாக அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிகின்றது. மணமளின் நடனம் அனைவரின் கனவத்தையும் ஈர்த்ததை விட, அதற்கு மணமகனின் ரியாக்ஷன் தான் அனைவரது பார்வையிலும் அதிகமாக பட்டது. மணமகனின் உறவினர்கள் சிலர், மணமகளை பாராட்டும்படி அவரிடம் சொல்வதையும் காண முடிகின்றது.


வினோதமான திருமண வீடியோவை இங்கே காணலாம்:



வீடியோ வைரல் ஆனது


இந்த வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @vipinrajput8374 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு  67 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 'மாப்பிள்ளை பந்தா இதுதானா' என ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். 'அந்த மணமகளை பார்த்தால் பாவமாக உள்ளது' என மற்றொரு பயனர் கூறியுள்ளார். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | ஹய்யயோ.. குப்பை தொட்டியில் இப்படியா.. விஷப் பாம்பின் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ