வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. இந்திய திருமணங்களுக்கு பல சிறப்பம்சங்கள் உள்ளன. அட்டகாசமான நடன அசைவுகள், கிண்டல் கேலிகள், கலாட்டா நிகழ்வுகள் என நமது திருமணங்களில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. பொதுவாக தன்னுடைய திருமணத்தில் தன்னுடைய வருகை ஒரு பிரம்மாண்டமான முறையில் இருக்க வேண்டும் என திருமணம் புரிந்துகொள்ளும் மணமகள் நினைப்பது வழக்கம். வெட்கப்பட்டு, குனிந்த தலையுடன் தான் மணமகள் இருக்க வேண்டும் என்ற சிந்தனை பழங்கால சிந்தனையாகி விட்டது.


தற்போது மணம் புரியும் பெண்கள், வழக்கமான பாணியை புறக்கணித்து புதுப்புது விதங்களில் திருமண நாளை அனுபவிக்க ஆசைப்படுகிறார்கள். இப்போதும் அப்படிப்பட்ட ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. இந்த வீடியோவில், மணமகள் தனது திருமணத்தில் மேள தாளத்துக்கு ஏற்றவாறு அட்டகாசமாக நடமாடுவதைக் காண முடிகின்றது. 


இந்த உற்சாகமான மணமகள், அழகான திருமண லெஹெங்காவில் தேவதைப் போல காணப்படுகிறார். தனது திருமண நாளில் அவர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பது அவர் ஆடும் அழகான மற்றும் துடிதுடிப்பான நடன அசைவுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. 


மேலும் படிக்க | ஆற்றை அந்தரத்தில் கடக்கும் கோழி - Viral Video


மணமகளின் அந்த வேற லெவல் நடனத்தை இந்த வீடியோவில் காணலாம்:



ஆயுஷி என அடையாளம் காணப்பட்ட இந்த மணமகள், தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த வீடியோ-வை பதிவேற்றினார். அதில் அவர் "நான் ஒரு வெட்கப்படும் மணமகள் அல்ல. என திருமணத்தை வித்தியாசமாக அனுபவிக்க ஆசைப்பட்டேன்” என்று எழுதியுள்ளார். 


இந்த வீடியோ வைரல் ஆகியுள்ளது. இதற்கு இதுவரை மில்லியன் கணக்கான வியூஸ்களும் 168,752 லைக்குகளும் கிடைத்துள்ளன. கமெண்ட் செக்‌ஷனில் பல ஹார்ட் எமோஜிகளும் ஃபையர் எமோஜிகளும் நிரம்பியுள்ளன. மனமளின் துடிதுடிப்பான மகிழ்ச்சியான நடனத்தை அனைவரும் விரும்புகிறார்கள். 


இவ்வளவு கனமான லெஹங்காவை அணிந்துகொண்டு அவரால் எப்படி இவ்வளவு அமர்க்களமாக நடனமாட முடிந்தது என்றும் பலருக்கு ஆச்சரியமாக உள்ளது. 


மணமகளின் இந்த அசத்தலான வீடியோவுக்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 


மேலும் படிக்க | நாயைக் காப்பாற்ற சென்ற நபருக்கு வந்த சோதனை: காண்டான கங்காரு 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR