நாயைக் காப்பாற்ற சென்ற நபருக்கு வந்த சோதனை: காண்டான கங்காரு

Funny Video: ஒரு நாயைக் காப்பாற்ற செல்லும் ஒருவர், தானே கங்காருவிடம் சிக்கிக்கொள்வதை இந்த வீடியோவில் காண முடிகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 24, 2022, 07:16 PM IST
நாயைக் காப்பாற்ற சென்ற நபருக்கு வந்த சோதனை: காண்டான கங்காரு title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

காட்டு விலங்குகளின் வீடியோக்கள் எப்போதும் சமூக ஊடகங்களில் வைரல் ஆகின்றன. இதன் காரணம் இவற்றுக்கு இருக்கும் வித்தியாசமான ஸ்டைலாகும். சில நேரங்களில் விலங்குகள் மோதிக்கொள்வதையும், சில நேரங்களில் கொஞ்சிக்குலாவுவதையும் நாம் இந்த வீடியோக்களில் காண்கிறோம். 

சில  வீடியோக்களில் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள பிணைப்பும் காணப்படுகின்றது. தற்போது வெளியாகியுள்ள காணொலியிலும், கங்காரு ஒன்று ஒருவரை தாக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த தாக்குதல் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. இதைப் பார்த்தால் அனைவருக்கும் கண்டிப்பாக சிரிப்பு வரும். 

ஒரு நாயைக் காப்பாற்ற செல்லும் ஒருவர், தானே கங்காருவிடம் சிக்கிக்கொள்வதை இந்த வீடியோவில் காணலாம். அந்த நபர் தப்பினோம் பிழைத்தோம் என அலறி அடித்துக்கொண்டு ஓடுவதையும் காண முடிகின்றது. 

கங்காரு நபரைத் தாக்கியது

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், தனது நாயைக் காப்பாற்ற கங்காருவின் அருகில் ஒருவர் செல்வதைக் காண முடிகின்றது. கங்காரு தனக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்காது என அவருக்கு தோன்றுகிறது. ஆனால், கங்காருவின் அருகில் அவர் சென்ற உடனேயே, அது அவரை தன் கால்களால் தாக்குகிறது. கங்காரு கொடுத்த உதையால் அந்த நபர் விழுந்துவிடுகிறார். மறுபுறம் இதைப் பார்த்த அந்த நபரின் குழந்தைகளும் உறவினர்களும் வெகுவாக சிரிப்பதையும் வீடியோவில் கேட்க முடிகின்றது. 

மேலும் படிக்க | ‘தலகீழ நின்னாவது உன்ன.....’ நாளைக்கு கல்யாணம், இன்னிக்கு இது தேவையா? 
கங்காருவின் அந்த கலக்கல் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (@nature27_12)

காட்டில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ வைரலானது

இந்த வீடியோவைப் பார்க்கும் போது அந்த நபர் சுற்றுலா போல் குடும்பத்துடன் காட்டிற்கு வந்திருப்பது தெரிகிறது. அப்போது அவருடைய வளர்ப்பு நாயின் அருகில் கங்காரு வருகிறது. அதைக் காப்பாற்ற செல்லும் நபர் பரிதாபமாக தாக்கப்படுகிறார்.

இந்த வீடியோ nature27_12 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. காட்டு விலங்குகள் தொடர்பான இந்த வீடியோ ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவுக்கு சமூக ஊடக பயனர்கள் பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

மேலும் படிக்க | சிறுவயதில் பிரிந்த தந்தையை தேடிய மகள்; 24 மணிநேரத்தில் சேர்த்து வைத்த டிவிட்டர்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News