வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.


இந்திய திருமணங்களுக்கு பல சிறப்பம்சங்கள் உள்ளன. அட்டகாசமான நடன அசைவுகள், கிண்டல் கேலிகள், கலாட்டா நிகழ்வுகள் என நமது திருமணங்களில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. 


திருமணங்களில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. அதேபோல், கோபதாபங்களுக்கு இவற்றில் குறை இருப்பதில்லை. பொதுவாக திருமணங்களில் உறவினர்கள் கோபப்படுவது வழக்கம். ஆனால் தற்போது ஒரு திருமணத்தில் மணமகனும், மணமகளுமே கோவம் கொண்ட ஒரு செய்தி வைரல் ஆகி வருகின்றது. 


மணமகளும் மணமகனும் கோவித்துக்கொண்டு சண்டையிடும் பல வீடியோக்களை நாம் சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் பார்த்துள்ளோம். தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் ஒரு வீடியோவிலும் இதே போன்ற ஒரு சண்டையைக் காண முடிகின்றது. 


ஆசையாக மணமகள் காத்திருக்க மணமகன் திருமண மண்டபத்துக்கு மிகவும் தாமதமாக வருகிறார். இதனால் கடுப்பான மண்மகள் திருமணத்திற்கு வந்துள்ள அனைத்து விருந்தினர்களுக்கும் முன்னால் அவர் மீது கோவப்படுகிறார். மணமகளின் கோவத்தால் ஆத்திரமடையும் மணமகனும் மணமகள் மீது கோவம் கொள்கிறார். 


மணமகன் மீது கோவம் கொண்ட மணமகள் 


சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், மணமகனும் மணமகளும் திருமண விழா மேடையில் மாலை மாற்றும் சடங்குக்காக காத்திருப்பது தெரிகிறது. மாப்பிள்ளை ஊர்வலம் மிகவும் தாமதமாக வந்ததால் மணமகள் மிகவும் கோபத்துடன் காணப்படுகிறார். 


மேலுன் படிக்க | மாஸாக எண்ட்ரி கொடுக்கும் மணமகள்: ‘சோ ச்வீட்’ என பாராட்டும் நெட்டிசன்கள், வீடியோ வைரல் 


மணமகன் மணமகளுக்கு இனிப்புகளை ஊட்ட முயற்சிக்கும்போது, அவர் இனிப்புகளை தூரமாக வீசுகிறார். மணமகனும் மணமகளின் அணுகுமுறையால் கோபமாகிறார். மணமகள் அவர்களது சடங்கின் படி ஒரு கிளாசில் பால் அளிக்க முயலும் போது, மணமகன் அதை ஏற்க மறுத்துவிடுகிறார். இதனால் எரிச்சல் அடைந்த மணமகள் டம்பிளரை தூக்கி எறிகிறார். 


மணமகனும் மணமகளும் சிறு குழந்தைகளாய் சண்டையிடும் வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு



மணமக்களின் இந்த சண்டை வைரல் ஆனது


மணமக்களின் இந்த வீடியோ வெளியானதில் இருந்தே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, weddingcouplepageandindianweddingpage என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்த்த பயனர்களில் பலர், வாழ்க்கை துவங்கும்போதே, இவர்களுக்குள் இத்தனை பிரச்சனைகள் ஏற்படுகின்றனவே என கவலை கொள்கின்றனர். 


‘அமைதி தேவை, அவசரம் ஆகாது’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். ‘ஏய் ஏய் அமைதியாக இரு' என்று மற்றொருவர் வேடிக்கையாக எழுதியுள்ளார். 


மேலும் படிக்க | சின்னபுள்ளதனமால்ல இருக்கு!! மணமேடையில் மணமகன் மணமகள் செய்த காரியம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR