இதயங்களை கனக்க செய்யும் மழலையின் செயலால் வைரலாகும் வீடியோ!

சிறிய குழந்தை ஒன்று தன் தாத்தாவை பிரிய மனமில்லாமல் உணர்ச்சிவசப்பட்டு அழுகும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 2, 2022, 10:43 AM IST
  • தாத்தாவிற்கு டாடா காட்டும் குழந்தை.
  • கியூட் எஸ்பிரசனால் பலரையும் கவர்ந்துள்ளது.
இதயங்களை கனக்க செய்யும் மழலையின் செயலால் வைரலாகும் வீடியோ! title=

கடந்த 2021 மார்ச் மாதம் பகிரப்பட்ட குழந்தையின் வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி பலரையும் ஈர்த்து வருகிறது.  மூன்று வயதாகும் கேமி என்கிற சிறுமி இன்ஸ்டாகிராமில் 131k பின்தொடர்பவர்களுடன் இணையத்தில் ட்ரெண்டாக இருக்கிறார்.  இவரது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை கேமியின் தாயார் தான் கவனித்து கொள்கிறார், அவர் அடிக்கடி கேமியின் குறும்புத்தனமான செயல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என பதிவிட்டு வருகிறார்.  அந்த வகையில் கடந்த ஆண்டு பதிவிடப்பட்ட உணர்வுபூர்வமான வீடியோ ஒன்று நெட்டிசன்களை கவர்ந்ததையடுத்து இப்போது அந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 

child

மேலும் படிக்க | Viral Video: போரை நிறுத்துங்கள் மழலையின் கெஞ்சல்! வீடியோ வைரல்

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், காரின் பின் சீட்டில் அழகிய உடை அணிந்துகொண்டு அந்த சிறுமி கேமி அமர்ந்திருக்கிறாள்.  காருக்கு வெளியே நிற்கும் அவள் தாத்தாவுக்கு அந்த சிறுமி ஃபிளையிங் கிஸ் கொடுக்கிறார்.  அந்த குழந்தையின் தாத்தாவும் முத்தம் கொடுத்துவிட்டு குழந்தையை பார்த்து ஆனந்தமாக கை அசைக்கிறார்.  அந்த குழந்தையும் தாத்தாவிற்கு டாட்டா காட்டிவிட்டு அவரை பிரிய மனமில்லாமல் கண்ணீர் வடிக்கிறது.  இந்த காட்சி இணையத்தில் பார்த்த பலரையும் கண்கலங்க செய்திருக்கிறது.  பலருக்கும் அவர்களது சிறு வயதில் தாத்தாவுடனான உறவை நினைவுபடுத்தும் விதமாகவும் இது அமைந்து இருக்கிறது. 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cami Louis (@camifrobabe)

அந்த வீடியோவுடன் "உங்கள் சிறந்த நண்பரான தாத்தாவை விட்டு நீங்கள் பிரியும்போது" என்கிற கேப்ஷனையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.  இந்த வீடியோவை பார்த்த ஒருவர் அந்த குழந்தை மிகவும் அழகாக இருக்கிறது, இருவரும் ஒரு அழகான உறவை கொண்டுள்ளனர் என்று கமெண்ட் செய்துள்ளார்.  மற்றொருவர் இது எனக்கு கண்ணீரை வரவழைத்து இருக்கிறது, இந்த குழந்தை ஒரு தேவதை என்று கமெண்ட் செய்துள்ளார்.  இப்படி பலரும் குழந்தையின் வீடியோவிற்கு சிறந்த கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | பாண்டா குட்டிக்கு புட்டி பால் கொடுத்த ஊழியர்! வைரலாகும் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News