கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா: கில்லி பட ஸ்டைலில் ஒரு வைரல் வீடியோ
Funny Wedding Video: இந்தியாவில் திருமணங்கள் திருவிழாக்களை போல நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்வுகளில் பல்வேறு வகையான வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கின்றன.
வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
இந்தியாவில் திருமணங்கள் திருவிழாக்களை போல நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்வுகளில் பல்வேறு வகையான வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கின்றன. இவற்றின் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளன.
மேலும் படிக்க | பந்தா காட்டி பல்வு வாங்கிய பாப்பா: வீடியோ பார்த்தா சிரிக்காம இருக்க முடியாது
இவற்றை பார்ப்பதில் இணையதளவாசிகளும் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள். இப்போது, இதே போன்ற திருமண வீடியோ ஒன்று சமூக ஊடக தளங்களில் பிரபலமாக உள்ளது. இந்த வீடியோவில், திருமண உடையில் மணமகனும் மணமகளும் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டுள்ளதை காண முடிகின்றது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் rkkhan6549 என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது.
விஜய் நடித்த கில்லி படத்தில் வரும், ‘கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா’ பாடலில் வருவதை போல, கல்யாணம் ஆனவுடனேயே இந்த மணமக்கள் ஓடுவதைப் பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது. இவர்களுக்கு இடையில், ஓட்டப்பந்தையம் நடக்கிறதா, இவர்களை யாராவது துறத்துகிறார்களா என பல ஊகங்கள் எழுகின்றன.
கண் மண் தெரியாமல் ஓடும் மணமக்களின் அந்த வீடியோ இதோ: