திருமண மண்டபத்தில் மணமகனுக்கு முத்தமிட்ட மணமகள்: வீடியோ வைரல்
மணமகன் தனது மணப்பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டுவது வீடியோவில் உள்ளது. மணமகனும், மணமகளும் ஒருவரையொருவர் எதிர்கொள்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் மணமகள் மணமகனை முத்தமிடுகிறார், பின்னர் என்ன நடந்தது என்பதை இந்த வீடியோவில் காண்க.
மணமக்களின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அதே சமயம் இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
அந்த வகையில் சமூக வலைதளங்களில் மணமகள் மணமகன் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதில் மணமகன் தனது மணப்பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டுவது வீடியோவில் உள்ளது. மணமகனும், மணமகளும் ஒருவரையொருவர் எதிர்கொள்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் மணமகள் மணமகனை முத்தமிடுகிறார், ஆனால் இவர்கள் பின்னர் தனது குடும்பத்தினர் மற்றும் புரோகிதருக்கு முன்னால் வெட்கப்படுவதையும் நீங்கள் காணலாம்.
மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்
வீடியோவை இங்கே பார்க்கவும்
இந்த காட்சியை பார்த்து குடும்பத்தினர் சிரித்தனர். இப்போது நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பார்த்து சூப்பர் ஜோடி என்று கூறி வருகின்றனர். அதே சமயம் சிலர், இது இந்திய மரபுகளுக்கு எதிரானது என்றும், புரோகிதர்கள் முன்னிலையில் உள்ள மண்டபத்தில் இதைச் செய்யக் கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகின்றது, மேலும் இந்த வீடியோ @witty_wedding என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ