Bride Groom Viral Video: ஒரு தனித்துவமான திருமண சடங்கை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியதில் இருந்து, அந்த வீடியோ தொடர்ந்து பகிரப்பட்டு வந்தது. வைரலான அந்த வீடியோ தற்போது லட்சக்கணக்கான லைக்ஸ்களை அள்ளியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், மணமகளின் பெற்றோர், மணமகனுக்கு ஒரு சிறப்புப் பரிசை அளித்து வரவேற்பதைக் காட்டுகிறது. அதாவது, அங்கிருந்த சோபாவில் மணமகன் அமர்ந்திருந்தார். அவரின் வாயில் ஒரு சிகரெட் இருந்தது. அப்போது, அவரின் திருமணம் செய்துகொள்ள உள்ள பெண்ணின், தாய், தந்தை இருவரும் சேர்ந்து, அந்த சிகரெட்டை பற்றவைத்தனர்.


மேலும் படிக்க | பார்த்தா வெக்கம் வெக்கமா வரும்: மரத்தின் பின் காதல் ஜோடிகள் சில்மிஷம்: வைரல் வீடியோ


திருமணத்திற்கு விருந்தினராக வந்திருந்த இணைய பதிவர், ஜூஹி கே படேல்,"தெற்கு குஜராத்தில் உள்ள சில கிராமங்களில் இது ஒரு பாரம்பரிய வழக்கம்" என்று கூறினார். அவர் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே, அது வைரலானது. புகைபிடித்தல் திருமணத்துடன் எந்தவிதத்திலும் தொடர்புடையது அல்ல என்பதால் இந்த அசாதாரண சடங்கு பல நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழத்தியது.


வைரல் வீடியோ:



இந்த வீடியோவை பார்த்தவர்கள், ஆரம்பத்தில் இந்த காட்சியால் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும், வீடியோவை பதிவேற்றிய ஜூஹி, அந்த மணமகன் புகைபிடிப்பதில்லை என்பதை விளக்கினார். மேலும், உண்மையில், மணமகளின் தாயும், தந்தையும் சிகரெட்டை பற்றவைக்கவே இல்லை. அது ஒரு சம்பிரதாயமானதுதான் என்றும் விளக்கினார். 


இந்த வீடியோவில் பல குழப்பங்கள் இருந்தபோதிலும், சமூக ஊடகங்களில் அது பல பேரின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. பல பயனர்கள் தனித்துவமான மற்றும் நகைப்புக்குரிய இந்த பாரம்பரிய சடங்கைப் பாராட்டியுள்ளனர். இருப்பினும், சிலரோ அது வெறும் சம்பிரதாயமாக இருந்தாலும், புகைபிடிப்பதை ஊக்குவிப்பதாக உள்ளது என விமர்சித்துள்ளனர்.


விவாதத்தின் எந்தப் பக்கத்தில் நீங்கள் இருந்தாலும், இந்த வீடியோ உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது தெளிவாகிறது. யாருக்குத் தெரியும், ஒருவேளை இந்த தனித்துவமான திருமண பாரம்பரியம் ஒரு வைரல் சடங்காக மாறி, மற்றவர்கள் தங்கள் சொந்த திருமணத்திலும் இதை முயன்று பார்க்க வாய்ப்புள்ளது. 


மேலும் படிக்க | பாம்புகளை செல்லமா தட்டி தூங்கவைக்கும் பெண்: காணக்கிடைக்காத வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ