வைரலான மணப்பெண் புகைப்படம்... கதறிய நெட்டிசன்கள் - உடனே உள்ளே வந்த ரயில்வே... என்ன மேட்டர்?
Viral News Latest: மணப்பெண் ஒருவர் ரயிலின் கதவு ஓரத்தில் தரையில் அமர்ந்து செல்லும் புகைப்படம் வைரலானது. இதில் இந்தியன் ரயில்வேவும் பதிலளித்த நிலையில், இச்சம்பவத்தின் பின்னணியை இங்கு காணலாம்.
Viral News Latest: மணப்பெண்கள் என்றாலே அவர்கள் திருமணம் முடிந்து, கணவன் வீட்டிற்கு செல்லும் போது காரின் பின்பக்க இருக்கையில், ஜன்னல் ஓரம் அமர்ந்து தனது பெற்றோர், உறவினர்களை விட்டு பிரிவதால் கண்ணீருடன் செல்லும் காட்சிதான் அனைவருக்கும் ஞாபகத்தில் வரும். ஆனால், இங்கு ஒரு மணப்பெண் தனது கணவன் வீட்டிற்கு செல்லும் காட்சியை பார்த்தால் உங்களுக்கே கண்ணீர் வந்துவிடும்.
மணப்பெண் ஒருவரின் புகைப்படம் தற்போது வைரலாகி வரும் சூழலில் இந்த சம்பவம் குறித்து விரிவாக இங்கு காணலாம். அதாவது, ரயிலில் ஒரு மணப்பெண் கதவுகள் அருகே கீழே அமர்ந்து செல்லும் புகைப்படம்தான் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
X தளத்தில் Potato என்ற பயனர்தான் அந்த பெண்ணின் புகைப்படத்தை முதன்முதலில் பதிவிட்டார். அந்த பதிவில் அவர்,"பெற்றோர்களே, உங்கள் மகளை தயவுசெய்து, தனக்கும், உங்கள் பெண்களுக்கு நல்ல வாழ்க்கையை அளிக்க முடியாதவருக்கு திருமணம் செய்து கொடுக்காதீர்கள். நாள்கள் செல்ல செல்ல அவர்களுக்குள் பணப் பிரச்னை தினந்தோறும் சண்டையாக மாறிவிடும்" என பதிவிட்டார். இதுதான் புயலை கிளப்பி, இந்தியன் ரயில்வே இதுகுறித்து பதிவிடும் அளவுக்கு வைரலானது.
மேலும் படிக்க | “இந்தியில் பேசுங்க” வேறு மொழி பேசியவரை அதட்டிய பெண்-மெட்ரோவில் வெடித்த சண்டை!
பரபரப்பை கிளப்பிய மற்றொரு பதிவு
எது ரயில்வே இதுகுறித்து பதிவிட்டதா என நீங்கள் ஷாக் ஆவது புரிகிறது, சமூக வலைதள காலத்தில் இதுவும் இயல்பாகிவிட்டது. ஆனால் அதற்கு முன் ஏன் இந்த விஷயத்தில் ரயில்வே பதிவிட முன்வந்தது என்பதை இங்கு காணலாம். வைரலான அந்த பெண்ணின் புகைப்படத்திற்கு ஜித்தேஷ் என்ற நபர் பதிலளித்திருந்தார். அதாவது அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் தனது மனைவிதான் என்றும், மனைவியின் இந்த நிலைக்கு காரணம், இந்தியன் ரயில்வேதான் என பதிவிட்டிருந்தார்.
அவரது தனது பதவில்,"நன்றி அஸ்வினி வைஷ்ணவி அவர்களே... உங்களால்தான் எனது மனைவிக்கு உலகத்தர வசதி கொண்ட ரயில் பயணம் கிடைத்தது. நான் உங்களுக்கு கடன்பட்டுள்ளேன்" என பதிவிட்டிருந்தார். இந்த பதிவும் வைரலானது. தொடர்ந்து, அந்த பெண் கீழே அமர்ந்திருக்கும் புகைப்படமும் தீயாக பரவத்தொடங்கியது.
உள்ளே வந்த இந்தியன் ரயில்வே
ஜித்தேஷின் இந்த பதிவுக்கு இந்தியன் ரயில்வேயின் Railway Seva பதில் அளித்தது. அதில்,"பயண விவரங்கள் (PNR/UTS எண்) மற்றும் உங்களின் மொபைல் எண்ணை தனிப்பட்ட மெசேஜ் மூலமாக எங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதனால் உங்கள் புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் கவலையை நீங்கள் நேரடியாக எங்களின் இணையதளத்திலும் தெரிவிக்கலாம் அல்லது விரைவான தீர்வுக்காக 139 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்" என பதிவிட்டது. தொடர்ந்து சில மணிநேரத்திலேயே,"இன்னும் நீங்கள் உங்களின் தகவல்களை பகிர்ந்துகொள்வீர்கள் என காத்திருக்கிறோம். நீங்கள் பகிர்ந்தால் மட்டுமே உங்களின் புகாரை பெற்றுக்கொண்டு அதை பதிவு செய்து அதன்மீது நடவடிக்கை எடுக்க இயலும்" எனவும் பதிவிட்டிருந்தது.
இதன்மூலம், ஜித்தேஷ் என்ற பயனரின் மனைவிதானா அந்த பெண், அல்லது அவதூறு பரப்ப அந்த பதிவை அவர் பதிவிட்டாரா என நெட்டிசன்கள் தங்களின் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க | சைக்கிளில் கேட்காமல் ஏறிய நபர்..பெண் செய்த செயல்..வைரல் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ