நாம் அனைவருக்கும் கடந்த காலம் என்று ஒன்று உள்ளது, சிலருக்கு இப்பக்கங்கள் நன்மை பயக்கும். ஆனால் அனைவருக்கும் அவ்வாறு அமைந்துவிடுவதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவ்வாறு தான் பிரிட்டிஸ் ராணுவத்தை சேர்ந்த 26-வயது இளம் அதிகாரிக்கு அவரது கடந்த காலம் அவரது பணிக்கே ஆபத்தாய் அமைந்துள்ளது.


பிரிட்டிஸ் ராணுவத்தில் ஆயுத பிரிவில் சிறந்த அதிகாரியாக பணியாற்றி வருபவர் 26-வயது Briony Murray. சமீபத்தில் இவரது அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்கள் பிரபல ஆபாச வலைதளங்களில் பகிரப்பட்டிருந்தது.



இந்த விவகாரம் இராணுவ உயர் அதிகாரிகளை எட்ட, ஒரு ராணுவ பெண் இவ்வாறு ஆபாச புகைப்படங்களுக்கு சம்மதிக்கலாமா என கேள்வி எழுப்பியுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட Briony Murray உடன் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.


பின்னர் Briony Murray மீது தவறுகள் ஏதும் இல்லை எனவும், இப்புகைப்படங்கள் அவரது முந்தைய பணியின் போது எடுத்த புகைப்படங்கள் எனவும், முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது மீண்டும் இணையத்தில் பகிரப்பட்டு வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


அப்படி என்ன வேலை செய்தார் Briony Murray?., ராணுவத்தில் சேருவதற்கு முன்னதாக Briony Murray ஆபாச புகைப்பட மாடலாக பணியாற்றியுள்ளார். பின்பு ராணுவத்தில் பணியமர்த்தப்பட்ட பின்னர் முந்தைய தொழிலை விட்டு ராணுவத்துறையில் கவனம் செலுத்தியுள்ளார்.


Briony Murray மீது விசாரணை நடந்து முடிந்த பின்னர் Briony Murray-ன் பணி குறித்து அதிகாரிகள் சிந்தித்துள்ளனர். இறுதியில் Briony Murray ஒரு சிறந்த ஆயுதப்படை வீராங்கனை என்பதால் அவரை ராணுவத்தில் தொடர அனுமதித்துள்ளனர்.