இரண்டு பெரிய பொதுத்துறை தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களான BSNL மற்றும் MTNL ஒன்றிணையாது என்னும் தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

BSNL மற்றும் MTNL ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களை இணைப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


நிதி நெருக்கடியில் தவித்து வரும் BSNL மற்றும் MTNL தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் மறுமலர்ச்சி திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் படி, இரு நிறுவனங்களுக்கும் நாடு முழுவதும் 4G சேவைகளை தொடங்க உரிமம் வழங்கப்படும். இது இரு நிறுவனங்களின் மோசமான நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு வாய்ப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செவ்வாயன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், இரு நிறுவனங்களும் VRS-கான திட்டங்களைத் தயாரித்து, ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும்,  ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 58 ஆண்டுகளாகக் குறைக்கவும் முடிவு செய்துள்ளது. மேலும், ஒன்றிணைத்தல், கடன்கள் மற்றும் சொத்துக்களை விற்பனை செய்வதற்கான திட்டத்தின் அடிப்படையில் சிறப்பு நோக்கம் கொண்ட வாகனம் அமைக்கும் முடிவை PMO ஒத்திவைத்துள்ளது.


இந்த கூட்டத்தில் இரு நிறுவனங்களும், சொத்துக்களை விற்க அல்லது வாடகைக்கு ஒரு கூட்டுக் குழு அமைக்க ஒப்புதல் அளித்துள்ளன. இந்த குழுவில் BSNL, DoT மற்றும் முதலீட்டு துறை அதிகாரிகள் இடம்பெற்று இருந்தனர். இந்நிலையில் இந்த திட்டங்கள் அனைத்தும் தற்போது அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பப்படவுள்ளது. இதன் மூலம் மத்திய அரசாங்க உதவியுடன், BSNL ரூ .665 கோடியும், MTNL-க்கு ரூ .2120 கோடியும் கிடைக்கும்.


இதற்கு பதிலாக, அரசாங்கம் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட பத்திரங்களை அடமானமாக வைத்திருக்கும். BSNL தற்போது 14 ஆயிரம் கோடி ரூபாய் கடனைக் கொண்டுள்ளது மற்றும் 2017-18 நிதியாண்டில் 31287 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. தற்போது 1.76 லட்சம் ஊழியர்களைப் கொண்டுள்ள இந்நிறுவனம் VRS திட்டத்தினை தொடர்ந்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஊழியர்களின் எண்ணிக்கையை 75 ஆயிரமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.