குஜராத்தில் தெருவில் செல்பவர்களையெல்லாம் காளை ஒன்று முட்டித் தள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளன!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெருவில் வரும் மக்களை எல்லாம் விரட்டி விரட்டி குத்தும் மாட்டின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. குஜராத் ராஜ்கோட்டில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் முதியவர் ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தெருவோரம் நின்ற காளை, அவர் அருகில் வந்ததும் திடீரென பாய்ந்து அவரை கீழே தள்ளியது. சற்று நேரம் நின்று பார்த்த முதியவரை மீண்டும் துரத்திச் சென்று சுவரோரமாக அண்டிய அவரை கொம்பால் முட்டி தூக்கியது. 


அருகிலிருந்த ஒரு இளைஞர் தண்ணீரை ஊற்றி காளையை விரட்டி, முதியவரை மீட்டு தனது வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். இதையடுத்து அந்த காளை மீண்டும் அதே இடத்தில் சென்று நின்றது. இதையடுத்து, சற்று நேரத்தில் அவ்வழியாக பைக்கில் வந்த மற்றொரு இளைஞனின் வாகனத்தையும் அந்த காளை இதே போல் முட்டித் தள்ளியது. இதையடுத்து அந்த இளைஞரை அந்த காளை விரட்ட துவங்கியது. இந்த சம்பவத்தில் இருவர் காயமடைதனர். தெருவில் சென்றவர்களையெல்லாம் இதேபோல் அச்சுறுத்திய காளை மீட்கப்பட்டு, கோசாலையில் விடப்பட்டது.


இந்த வீடியோவை ANI செய்திநிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.