பிரபல டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமாக பைட் டேன்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது தரவு சேமிப்பு மையத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தடை விதிக்கப்பட வேண்டும் என பலராலும் நிர்பந்திக்கப்பட்டு வரும் செயலி டிக் டாக். இச்செயலியை பயன்படுத்துபவர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதன் தரவு சேமிப்பு மையத்தை இந்தியாவில் நிறுவ உள்ளதாக டிக் டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.


குழந்தைகள், இளைஞர்கள் என பெரும்பாலானோர் டிக் டாக் செயலியை பயன்படுத்திவருகின்றனர். திரைப்பிரபலங்கள் முதல் சாதாரண மனிதன் வரை அனைவரும் இந்த டிக் டாக் செயலியில் மூழ்கி உள்ளனர். இக்காலத்தின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறியுள்ள டிக் டாக் செயலியை பயன்படுத்துபவர்களின் தகவல்கள் திருடப்பட்டு, சீன நிறுவனங்களுக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதுதொடர்பாக, பல்வேறு கட்சி எம்பிக்கள் அண்மையில் நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். 


இதுதொடர்பாக, டிக் டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பைட் டேன்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நாடு முழுவதும் 10 கோடி டிக் டாக் பயன்பாட்டாளர்களும், 5 கோடி helo பயன்பாட்டாளர்களும் உள்ளதாகவும், அவர்களை பற்றிய தகவல்களை சேமித்து வைப்பதற்காக, இந்தியாவில் டேட்டா சேமிப்பு மையம் அமைக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளது.


இதுகுறித்து தனது வலைப்பதிவில் பைட்டேன்ஸ் பதிவிட்டுள்ளதாவது "அடுத்த பெரிய பாய்ச்சலுக்கான நேரம் வந்துவிட்டது என்று நாங்கள் இப்போது நம்புகிறோம், இந்த முயற்சிக்கு ஏற்ப, தொடர்புடைய பங்குதாரர்களுடன் மிகவும் சுறுசுறுப்பான உரையாடலை எதிர்பார்க்கிறோம், மேலும் புதிய வரையறைகளை அமைக்கிறோம்." என குறிப்பிட்டுள்ளது.


தற்போது டிக்டாக் மற்றும் ஹலோ பயனர்களின் தகவல்கள் சிங்கப்பூர் தகவல் சேமிப்பு மையத்தில் சேமித்து வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.