ரயில்களிலோ அல்லது ரயில் நிலையங்களிலோ தீ விபத்து ஏற்படாமல் தடுக்க சம்மந்தப்பட்ட துறையினர் மட்டும் தான் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமா? ஏன் சகபயணிகள் ஆகிய நம்மால் இந்த விபத்தை தடுக்க முடியாதா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம், நிச்சயமாக முடியும், இதற்கென உள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் கடைபிடித்தால் பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படுவதை நம்மால் தடுக்க முடியும்.  அதன்படி நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய சில வழிமுறைகளை பின்வருமாறு காண்போம்:


ALSO READ ஓடும் ரயிலிலிருந்து விழுந்த பெண் பிழைத்தாரா? வைரலாகும் திக் திக் வீடியோ


1) ரயில் நிலையங்களிலோ அல்லது ரயில் வண்டிகளிலோ ஒருபோதும் புகைபிடிக்க கூடாது.


2) ரயில் நிலையங்களிலோ அல்லது ரயில் வண்டிகளுக்குள்ளோ சிகரெட்டுகள், பீடி துண்டுகள் மற்றும் தீக்குச்சிகள் போன்றவற்றை தூக்கி எறியக்கூடாது.



3) ரயில் வண்டிகளில் பயணம் செய்யும்பொழுது அதனுள் கற்பூரம், மெழுகுவர்த்தி, சாம்பிராணி, தீபம், ஊதுபத்தி, கொசுவத்தி ஆகியவற்றை ஏற்றக்கூடாது.


4) அதேபோல ரயில் வண்டிகளில் பட்டாசு போன்ற இன்னும் பிற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல கூடாது  


மேலும் இதுபோன்றவற்றை செய்வது ரயில்வே சட்டம் 1989 படி 67, 151, 164, 165 & 167-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ’தேங்காய் உடைத்ததால் சாலையில் விரிசல்’ உ.பி. எம்.ஏல்.ஏ-வின் பகீர் குற்றச்சாட்டு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR