’தேங்காய் உடைத்ததால் சாலையில் விரிசல்’ உ.பி. எம்.ஏல்.ஏ-வின் பகீர் குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேசத்தில் 1.16 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட புதிய சாலையில் ஏற்பட்ட விரிசலுக்கு, தொடக்க விழாவில் தேங்காய் உடைத்ததே காரணம் என பா.ஜ.க எம்.ஏல்.ஏ கூறிய குற்றச்சாட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 4, 2021, 08:30 PM IST
’தேங்காய் உடைத்ததால் சாலையில் விரிசல்’ உ.பி. எம்.ஏல்.ஏ-வின் பகீர் குற்றச்சாட்டு title=

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் மக்கள் நலப்பணித் திட்டங்கள் முடுக்கவிடப்பட்டுள்ளன. பிஜ்நூர் பகுதி பா.ஜ.க எம்.ஏல்.ஏவான சுசி சௌத்திரியும் தன்னுடைய தொகுதியில் பம்பரமாக சுழன்று, சாலை உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளை நிறைவேற்றி கொடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக பிஜ்நூர் பகுதியில் சுமார் 1.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படும் இந்த சாலையின் பணிகள், 700 மீட்டர் தொலைவு வரை இப்போது நிறைவடைந்துள்ளது.

ALSO READ | பறவைகள் தங்கும் கூடு போல திருமண பத்திரிக்கை அடித்த குடும்பம்!

எஞ்சிய சாலைப் பணிகள் இன்னும் நிறைவடையாமல் இருக்கும் நிலையில், அந்த சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதன்படி, சட்டமன்ற உறுப்பினர் சுசி சௌத்ரி வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலை திறப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது, பூஜை போடப்பட்டு சாலையில் தேங்காய் உடைக்கப்பட்டுள்ளது. தேங்காயை ஓங்கி அடித்து உடைக்கும்போது, தார் சாலை பெயர்ந்து சிதறியுள்ளது. இதில் கடுப்பான எம்.ஏல்.ஏ தேங்காயை ஓங்கி அடித்தால், சாலை பெயர்ந்ததாக அங்கிருப்பவர்களை கடிந்து கொண்டுள்ளார். 

ALSO READ | CNG விலை உயர்வு; நடுத்தர மக்களுக்கு அதிக பாதிப்பு

அதன்பின்னர், சாலை தரமான முறையில் அமைக்கப்படவில்லை என்பது அறிந்து கொண்ட அவர், திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சாலைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் தரமான பொருட்களை வைத்து சாலை அமைக்கவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர், உடனடியாக அதனை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், சாலையை முறையாக அமைக்காத பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பின்னர், மாஜிஸ்திரேட் நேரடியாக வந்து ஆய்வு செய்தபின்னர், போராட்டத்தைக் கைவிட்டார். முறையாக சாலை அமைக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News