#USA-வில் கேப்டன்: ட்விட்டரில் தெரிக்கவிடும் விஜயகாந்த் family!

அமெரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது!
அமெரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது!
நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் பேச்சில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டு குரல்வளம் குறைந்து நீண்ட நேரம் பேசமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் பொதுக்கூட்டங்களையும், செய்தியாளர்களிடன் பேசுவதையும் தவிர்த்துவந்தார்.
அவருக்கு தைராய்டு மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இதற்காக அவர் கடந்த மாதம் 7 ஆம் தேதி குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது!