மும்பையில் எட்டுவயது சிறுவன் மீது கார் மோதியும் அந்த சிறுவன் அதிஷ்ட வசமாக உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையின் காட்கோபார் பகுதியில் உள்ள காமராஜ் நகரில் சுமார் இரவு 8 மணியளவில் சக சிறுவர்களுடன் ஒரு சிறுவன் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, அவர்களது பந்தானது அந்த காரின் அருகில் சென்றுள்ளது. உடனே இரண்டு சிறுவர்கள் பொய் எடுக்க போகிறார்கள். அப்போது ஒருவரின் ஷூ லேஸ் அவிழ்ந்துள்ளது. 


அப்போது, அந்த சிறுவன் அங்கேயே அமர்ந்து தனது ஷூ லேஸ்-யை சரி செய்து கொண்டிருக்கிறான். அப்போது, இந்த சிறுவனை கவனிக்காத ஒரு பெண்மணி காருக்குள் வந்து அவரது காரை இயக்கி அப்படியே முன்னாடி வருமாறு இயக்குகிறார். தனது காரை எடுத்துச் செல்லும் ஒரு பெண் சிறுவனைக் கவனிக்காமல் அவன் மீது காரை வேகத்தடியில் ஏறி இறங்குவது போன்று ஏறி இறங்கியது.  


அந்த சிறுவன் உயிரிழந்திருக்கக் கூடும் என பதைதைப்பு ஏற்பட்ட நேரத்தில் கார் சக்கரங்களின் இடைவெளியில் சிக்கியதால் அதிர்ஷ்டவசமாக தப்பிய சிறுவன் எதுவுமே நேராதது போல எழுந்து ஓடிச் சென்று மீண்டும் விளையாட செல்கிறான். இந்த சம்பவம் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. சிலவிநாடி நேரத்தில் நேர்ந்து விட்ட இந்தச் சம்பவம் உடன் விளையாடிய சக சிறுவர்களுக்கோ, அல்லது காரில் சென்ற பெண்ணுக்கோ தெரியவில்லை.


இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையின் போது 42 வயதுடைய சாந்தா மனோஜ் சந்திரக்கர் என்ற பெண் ஓட்டுனரை கைது செய்துள்ளனர். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரளாகி வருகிறது. அந்த வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது...!