இது புல் தின்னும் புலி அல்ல! காரை புல் பண்ணும் புல்லர் புலி! வைரலாகும் வீடியோ
காட்டில் வசிக்கும் புலி மனிதனைப் போல வேலை செய்தால் என்ன ஆகும்? வீடியோ வைரலாகும்!
புதுடெல்லி: சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்கள் பல்வேறு விதங்களில் எதிர்வினையாற்ருகின்றன. காட்டில் வசிக்கும் புலி மனிதனைப் போல வேலை செய்தால் என்ன ஆகும்? வீடியோ வைரலாகும்!
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது பழமொழி. அது உண்மையென்றாலும், புலி, பீரோ புல்லரைப் போல ‘புல்’ பண்ணும் என்பதை காட்டும் வீடியோ இது. சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த வீடியோவை பலரும் பார்த்து மகிழ்கின்றனர்.
புலி என்றாலே பீதியாகும் மக்கள், புலியின் வீடியோக்களைப் பார்த்தால் மகிழ்ச்சியடைகின்றனர். புலி மட்டுமல்ல, விலங்குகலின் வீடியோக்கள் இணையத்தில் பரவலாக பார்க்கப்படுகின்றன.
ஆனந்த் மஹிந்திராவால் பகிரப்பட்ட இந்த பயமுறுத்தும் வீடியோவில், ஒரு புலி ஒரு காரை கடிப்பதையும், தனது பற்களின் வலிமையால் அதை இழுப்பதையும் காணலாம்.
மஹிந்திரா சைலோ எஸ்யூவி காருக்குள் (Xylo SUV) சுற்றுலாப் பயணிகள் அமர்ந்திருப்பதையும், புலி தனது பற்களால் பம்பரைப் பிடித்துக் கொண்டு காரை பின்னோக்கி இழுப்பதையும் இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.
ட்விட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra), என்ன பதிவிட்டிருக்கிறார் தெரியுமா? “சரி, அந்த கார் ஒரு சைலோ, அதனால் தான் அதை கடிக்கிறது என்பதால், இதைப் பார்த்து எனக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை என்று நினைக்கிறேன். மஹிந்திரா கார்கள் அற்புதமானவை”
இந்த வீடியோ ட்விட்டரில் பலமுறை பகிரப்பட்டு, ஆயிரக்கணக்கில் லைக்குகளை அள்ளிக் குவிக்கிறது. மறுபுறம், இந்த வீடியோ, Xylo SUV காரின் பாதுகாப்பைப் பற்றிய கேள்விகளை எழுப்புவதாகவும் சிலர் கூறுகின்றனர். மற்றும் சிலர் காரை பற்களால் கடித்து நகர்த்திய புலி எப்படி இருக்கிறது என்று அதன் நலத்தையும் விசாரிக்கின்றனர்.
மற்றும் சிலரோ, எந்த நாட்டுக்கு யார் ராஜாவா இருந்தா என்ன? காட்டுக்குள்ள போனா, காருக்குள்ள இருந்தாலும் பாதுகாப்பா இருக்கனும் என்று அறிவுரைகளையும் சொல்கின்றனர். சிலர், இதுபோன்ற வீடியோக்கள் வித்தியாசமானதாக இருக்கிறது என்று சொல்லி பார்த்து, பகிர்கின்றனர்.
(பொறுப்புத்துறப்பு: ஜீ நியூஸ் இந்த வீடியோவை சுயாதீனமாக சரிபார்க்கவில்லை.)
Read Also | வால்பாறை நகருக்குள் உலா வரும் சிறுத்தை: பீதியில் மக்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR