Cat Dog Fight Viral Video: இணையம் முழுவதும் வனவிலங்குகள், பறவைகள் சார்ந்த வீடியோக்கள் அதிகம் உள்ளன. விலங்குகள் மற்ற விலங்குகளை வேட்டையாடுவது, தங்களுக்குள்ளேயே சண்டைப் போட்டுக்கொள்வது, தனக்கு ஜோடியை தேர்வு செய்ய விலங்குகள் செய்யும் வினோத காரியங்கள், உணவு மற்றும் நீர் தேடி யானை போன்ற விலங்குகள் வலசை போவது, பறவை கூடு கட்டுவது முதல் முட்டையிட்டு, அதை குஞ்சு பொரித்து அதற்கு உணவளிப்பது வரை பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் இணையத்தில் குவிந்து கிடக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயற்கையின் பேராற்றலை காண விரும்புபவர்களுக்கும், சுற்றுச்சூழல் சார்ந்த ஈடுபாடு கொண்டவர்கள்தான் வனம் சார்ந்த, வனவிலங்குகள் சார்ந்த வீடியோக்களை அதிகம் விரும்பி ரசித்து பார்ப்பார்கள். அதேபோல், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய், பூனைகள் சார்ந்த வீடியோக்களும் இணையத்தில் அதிகம் வைரலாகும். இதை ரசிப்பதற்கும் இணையத்தில் ஒரு தனிக்கூட்டமே உலாவுகிறது. ஆரஞ்சு நிற பூனைகள், லேப்ரடார் மற்றும் கோல்டன் ரெட்ரைவர் நாய்கள் ஆகியவை வீட்டில் செய்யும் சேட்டைகளும் ஆயிரக்கணக்கில் வீடியோவாக கொட்டிக்கிடக்கிறது. 


நாய்கள் கூட்டத்தில் சிக்கிய பூனை...


அந்த வகையில் தற்போது நாய்களுக்கும் பூனைகளுக்கும் இடையே நடந்த சண்டையின் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வைரலாகி வரும் இந்த வீடியோவில் நான்கு நாய்கள் சேர்ந்து ஒரு பூனையை கட்டம் கட்டி தாக்குதல் நடத்துகின்றன. உடனே, எங்கிருந்தோ ஓடி வரும் மற்றொரு பூனை தாக்குதலில் இருந்து அந்த பூனையை விடுவித்து, நாய்களிடம் இருந்து தன்னையும் தற்காத்து கொள்கிறது. முதலில் அடிவாங்கிய பூனை தப்பித்த உடன், இந்த பூனையும் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நாய்களிடம் இருந்து தப்பித்துவிடுகிறது.


மேலும் படிக்க | முதியவர் மீது ஸ்பிரே அடித்த இளைஞர்! காலை உடைத்த போலீஸ்! வைரல் வீடியோ!


சூப்பர் ஹீரோவாக வந்த மற்றொரு பூனை


வெறும் 14 விநாடிகள் மட்டும் ஓடும் இந்த வீடியோவில் அந்த பூனை வந்தது, மற்றொரு பூனையை நாய்களிடம் இருந்து காப்பாற்றியது, நாய்கள் கூட்டத்தில் இருந்து தப்பியோடியது என டக் டக்கென அனைத்தையும் அந்த பூனை செய்தது எனலாம். அவை வீட்டில் வளரும் பூனைகள் போல் தெரியவில்லை. பூனை தெருக்களில் அலையும்போது நாய்களிடம் சிக்கியிருக்கலாம், அதை அங்கு திரியும் நண்பன் பூனை (?!) காப்பாற்றியிருக்கலாம். பூனைகள் சாதுக்கள் என்றாலும் சாமர்த்தியசாலிகள் என பொதுவாக கூறப்படுவது உண்டு. இந்த வீடியோ பார்த்தால் அது உண்மை என்றுதான் தோன்றுகிறது.