கடையில் கொள்ளையடிக்க வந்த இரண்டு பேரை, தனி ஆளாக இளம்பெண் விரட்டியடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பரந்த உலகத்தில் வேடிக்கையான பல விஷயங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அவை அனைத்தும் அனைவருக்கும் தெரிவதில்லை. சில நிகழ்வுகள் மட்டும் எப்படியாவது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி அனைவரிடமும் சென்றடைகிறது. 


தற்போதைய காலகட்டத்தில் சிசிடிவி கேமிராவில் மூலம் தான் பல கொள்ளையர்களை காவல் துறையினர் பிடிக்கின்றனர். இது போன்ற ஒரு நகைதிருடனின் நகைச்சுவை வீடியோ வைரலாவதை நாங்கள் கண்டோம். அந்த வீடியோவில்,  பஞ்சாப் மாநிலம் மோகாவில் துப்பாக்கியுடன் கடையில் கொள்ளையடிக்க வந்த இரண்டு பேரை, தனி ஆளாக இளம்பெண் விரட்டியடிக்கும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.


அங்குள்ள கடை ஒன்றில் பணத்தை கொள்ளையடிக்க 2 கொள்ளையர்கள் உள்ளே புகுந்து மிரட்டினர். அவர்களில் ஒருவன் கையில் துப்பாக்கி வைத்திருந்தான். இதனைக் கண்ட கடையில் இருந்த பெண் உடனடியாக கொள்ளையர்கள் தன்னை நெருங்காதவாறு தடுப்பைப் போட்டு மூடினார்.


பிறகு கையில் செல்போனை எடுத்துக் கொண்டு அவர்களை நோக்கி துணிச்சலுடன் முன்னேறினார். அந்த பெண் கையில் ஏதோ ஆயுதம் வைத்திருப்பதாக நினைத்து குழப்பமடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர்.