பள்ளி விழாவுக்கு பெற்றோர்களை மற்ற குழந்தைகள் அழைத்து வந்த நிலையில், ஒரு குழந்தையின் பெற்றோர் மட்டும் வரவில்லை. விழா நேரத்தில் அனைத்து பெற்றோர்களும் அவரவர் குழந்தையின் பின்னால் வந்து நிற்க, தன்னுடைய பெற்றோர் வரவில்லை என்ற ஏக்கத்தில் விழாவில் நின்றபடியே கைதட்டிக் கொண்டிருக்கிறது அந்த குழந்தை. அப்போது, அந்த குழந்தையின் பெற்றோர் பார்வையாளர் மாடத்தில் இருந்து தன் குழந்தையை சத்தமாக கூப்பிட்டு, நாங்கள் இங்கிருக்கிறோம் என கூற, அவர்களை பார்த்ததும் ஆனந்தத்தில் தேம்பி தேம்பி அழுகிறது, அந்த குட்டி குழந்தை. கண்ணீரையும் அடக்க முடியாமல், சிரிப்பையும் அடக்க முடியாமல் ஒருவித நெகிழ்ந்த இதயத்துடன் சிறுமி கொடுக்கும் ரியாக்ஷன், காண்போரை நெகிழ வைக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குழந்தைகளின் உலகமே தனி. அதில் பொதிந்து கிடக்கும் அன்புக்கும், அரவணைப்புக்கும் எல்லையே இல்லை. இதனை அனுபவிக்க முடிந்தவர்கள் எல்லாமே பாக்கியசாலிகள். அந்தவகையில் பெற்றோராக இருப்பது இப்பிறவியில் கிடைத்த பாக்கியம் என்றுகூட கூறலாம். ஏனென்றால், குழந்தைகளிடம் கிடைக்கும் அன்பையும், அரவணைப்பையும் அருகே இருந்து பெறக்கூடிய வாய்ப்பு பெற்றோர்களுக்கு கிடைத்துவிடும். அவர்களும் தங்கள் குழந்தைகளுக்கு அதேபோன்றதொரு அன்பை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுப்பார்கள். 



குழந்தைகளை பொறுத்தவரை சின்ன சின்ன ஆசைகள் மட்டுமே இருக்கும். அவையனைத்தும் பெற்றோரால் நிறைவேற்றக்கூடியதாகவும் இருக்கும். அவர்கள் எதிர்பார்ப்பதை பெற்றோர் செய்துவிட்டால், குழந்தைகளின் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அப்படியொரு மகிழ்ச்சியை ஒரு குழந்தைக்கு சர்பிரைஸாக கொடுத்திருக்கிறார்கள் ஒரு பெற்றோர். வைரலாகியிருக்கும் அந்த வீடியோவில், கிறிஸ்துமஸ் விழா ஒரு பள்ளியில் கொண்டாடப்படுகிறது. அப்போது எல்லா குழந்தைகளின் பெற்றோரும் கலந்து கொண்டிருக்கும்போது ஒரு குழந்தையின் பெற்றோர் மட்டும் வரவில்லை. 


அதனால் அந்த குழந்தை சோகமாக மேடையில் நின்று கொண்டிருக்கும்போது, குழந்தையின் பெற்றோர் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து தாங்கள் வந்துவிட்டோம் என சத்தமாக அழைத்துக் கூற குழந்தை பூரிப்புடன் அழுதுவிடுகிறது. அதேநேரத்தில், குழந்தையினால் சிரிப்பையும் அடக்க முடியவில்லை. நெஞ்சை நெகிழவைக்கும் இந்த வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகியிருக்கிறது.