பருவமழைக்காலம் தொடங்கிவிட்டதால் அங்காங்கே மழை பொழிவு அதிகமாக இருக்கிறது. மலைப் பிரதேசங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, சாலைகள் எல்லாம் துண்டாகி பாதியாக உடைந்து கிடக்கின்றன. இதனால் போக்குவரத்து எல்லாம் பாதிப்படைந்ததுள்ளது. கிராமப் பகுதிகளில் மழை காரணமாக பாம்பு உள்ளிட்ட ஊர்வன மக்கள் வாழிடங்களை நோக்கி படையெடுக்கின்றன. இதனால், அச்சத்துடன் இருக்கும் மக்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். கிராம பகுதிகளில் மட்டுமல்லாது நகரப் பகுதிகளிலேயே பாம்பின் நடமாட்டங்களை பார்க்க முடிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மழைக்காலம் என்பதால் தண்ணீரில் அடித்து வரும் பாம்புகள், எங்கு வேண்டுமானாலும் உலவிக் கொண்டிருக்கின்றன. இணையத்தில் வைரலாகியிருக்கும் வீடியோவில் பாம்பின் தாக்குதலில் இருந்து சிறுவன் ஒருவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிக்கும் காட்சிகள் காண்போரை பதைபதைக்க வைக்கிறது. நாகப்பாம்பு வருவதை அறியாமல் வரும் சிறுவன், திடீரென பாம்பு கொத்த வருவதை பார்த்து அதிர்ச்சியடைகிறான். உடனே அருகில் இருக்கும் தாய் சுதாரித்துக் கொண்டு சிறுவனை பாம்பின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வைக்கிறார்.



மேலும் படிக்க | குத்தாட்டம் போட்ட ஸ்பைடர்மேன், வாய் பிளந்த மக்கள்: பரபரப்பை கிளப்பிய வைரல் வீடியொ


அந்த வீடியோவில், மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் நாகப்பாம்பு ஊர்ந்து செல்கிறது. ஒரு வீட்டின் வாசற்படி அருகே செல்லும்போது, அந்த வீட்டில் இருந்து தாயும் குழந்தையும் வெளியே வருகிறார்கள். இருவருக்கும் பாம்பு வாசற்படி அருகில் இருப்பது தெரியவில்லை. சிறுவன் வழக்கம்போல வாசற்படி அருகில் வந்து இறங்குகிறான். நொடியில் அவன் மிதிக்க வருவதை அறிந்து ஒதுங்கிக் கொள்ளும் பாம்பு, அந்த சிறுவனை தாக்க தயாராகிறது. இதனை அருகில் இருந்து அதிர்ச்சியோடு பார்க்கும் தாய், சிறுவனை கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கி காப்பாற்றுகிறார். இந்த வீடியோ காண்போரை பதபதைக்க வைக்கிறது. வீடியோவை பகிரும் நெட்டிசன்கள், மழைக்காலங்களில் மக்கள் விழுப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.


மேலும் படிக்க | Dance Video Viral: இணையத்தை கலக்கும் மச்சினியின் கலக்கல் டான்ஸ் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ