20 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை வகுப்பறையில் அடித்த ஆசிரியரை, சரமாறியாக தாக்கிய மாணவரை சீன காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் சாங்க் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தனது ஆசிரியர் ஜூவாங் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தனது வகுப்பறையில் வைத்து தன்னை அடித்ததாக கூறி தற்போது கடுமையாக தாக்கியுள்ளார்.


சாங்க்-ன் கல்லூரி பருவத்தில், ஜூவாங் அவருக்கு ஆங்கில பாடம் எடுத்த ஆசிரியர் எனவும், வகுப்பின் போது ஒருநாள் வகுப்பறையில் தூங்கிக்கொண்டிருந்த சாங்க்-னை ஜூவான் மாணவர்கள் அனைவரும் முன்னிநிலையுலும் தாக்கியதாக தெரிகிறது. இதன் காரணமாக மணதில் பழிவாங்கும் என்னத்துடன் திரிந்த சாங்க் தற்போது காலம் கணிந்த நிலையில் ஜூவாங்கினை தாக்கியுள்ளார்.


இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில்... வாகனத்தில் வரும் ஜூவாங்கினை தடுத்து நிறுத்தி தான் யார் என தெரிகிறதா என சாங்க் கேட்க., அதற்கு யார் என தெரியவில்லை என ஜூவாங் தெரிவிக்கின்றார். பின்னர் நடந்தவற்றை கூறு ஜூவாங்கை சாங்க் சரமாறியாக தாக்குகின்றார்.



இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சாங்க் மீது இரு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.