மேலை நாடுகளில் வசிக்கும் இளம்பெண்கள் தங்களது மார்பங்களை பெரிதாக காண்பிக்க சில அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதை பார்த்திருப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் சீனா-வை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல குளிர்பான நிறுவனம் ஒன்று, தங்களது குளிர்பானத்தை(தேங்காய் பால்) வாங்கி பருகினால் போதும், பெரிய மார்பங்களை பெற்றுவிடலாம் என விளம்பரப்படுத்தியுள்ளது.


சீனாவின் ஹெனான் பிராந்தியத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் குளிர்பான நிறுவனம் ஒன்று, தங்களது நிறுவனத்தில் தயாராகும் தேங்காய் பால்-னை விளம்பரப்படுத்து பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகளை கொண்டு விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.


இந்த விளம்பரங்கள் இரட்டை அர்த்த வசனங்களையும், சர்ச்சைக்குறிய கருத்துகளையும் கொண்டு வெளியாகியுள்ளது. குறிப்பாக தங்களது தேங்காய் பாலினை குடித்தால் பெண்களின் மார்பங்கள் பெரிதாகும் என்னும் விதத்தில் சித்தரித்து விளம்பரத்தினை வெளியிட்டுள்ளனர்.



பள்ளி, கல்லூரி மாணவிகளை கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரத்தில் வரும் நடிகைகள் கடல் நீரில் குளிக்கும் விதமாகவும், குளித்துவிட்டு சக்திக்காக இந்த தேங்காய் பாலை குடிப்பதாகவும் சித்தரித்துள்ளனர். மேலும் விளம்பரத்தில் வரும் இரட்டை அர்த்த வசனங்கள் சீன மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவற்றுள் சில வசனங்கள்...


  • "உங்கள் வலைவுகளை துள்ளியமாக்க தினமும் ஒரு தேங்காய் பால் பருகுங்கள்", இளம்பெண் ஒருவர் தனது மேனியை வருட்டிக்கொண்டு கூறும் வசனம்.

  • கையில் ஒரு தேங்காய் பால் பாட்டிலை வைத்துக்கொண்டு., ‘சின்னாதக இருந்தது முதல் பெரிதானது வரை குடிக்கிறேன்’ என அரை நிர்வாண உடையில் சிறுமி கூறும் வசனம்.

  • "தேவைக்கு அதிகமாக பால் கொடுக்க வேண்டுமா?., தினமும் ஒரு தேங்காய் பால் பருகுங்கள்" என இளம்பெண் ஒருவர் தனது மார்பை வருடிக்கொண்டே கூறும் வசனம்.


போன்றவை சீன நாட்டில் இந்த விளம்பரத்தையே தடை செய்துள்ளது. குறிப்பிட்ட நிறுவனம் இவ்வாறான விளம்பரங்களை வெளியிடுவது இது முதல் முறை அல்ல,. முந்தைய காலங்களிலும் இவ்வாறான சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.