தெலுங்கு நடிகர் ராம் சரண் தயாரிப்பில் தனது தந்தை நாயகனாக நடிக்கும் படம் சாய் ரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இந்த படத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, நாசர் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படம் தமிழ் தெலுங்கு, மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படம் "உயாலவாடா நரசிம்ம ரெட்டி" வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது.


இந்நிலையில் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாராக இருக்கும் இப்படத்தின் சில நடிகர்களின் பட புகைப்படங்கள் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.