மனிதன் புத்திசாலியாக இருப்பதால் தான் நவீன கண்டுபிடிப்புகள் சாத்தியமாகின்றன. குரங்கில் இருந்து மனிதன் தோன்றியதாக சொல்லப்படும்போது, மனிதரைப் போலவே சிந்திக்கவும், செயல்படவும் குரங்குகளுக்கு சொல்லிக் கொடுக்கவா வேண்டும்?
ஆனால், குரங்கை ஒரு விலங்காக மட்டுமே பார்ப்பதால் அவற்றின் புத்திசாலித்தனமும், சாமர்த்தியமும் நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குளிர்பானம், இது மனிதர்களுக்கு மட்டுமா பிடிக்கும்? எங்களுக்கும் பிடிக்கும் என்று சப்புக்கொட்டி குடிக்கும் குரங்கு வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகிறது. அதிலும், பூட்டியக் கதவுக்குள் இருக்கும் குளிர்பான பாட்டிலைப் பார்த்ததும், அதை எப்படி வெளியே எடுப்பது என்று யோசித்து, குரங்கு அதை எடுப்பது பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது.




முதலில் குரங்கு எங்கிருந்தோ ஒரு குச்சியைக் கொண்டுவருகிறது. பிறகு, குச்சியின் உதவியுடன், குளிர் பானத்தை எடுக்க முயல்கிறது. கதவிற்கு உள்ளே இருக்கும் குளிர்பான பாட்டிலை குச்சியின் உதவியால் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்ற குரங்கு, மூடியைத் திறந்து குளிர்பானத்தையும் அருந்துகிறது.


READ ALSO | கர்ப்பிணி பெண்ணுக்கு உதவும் சிறுமி! வைரலாகும் வீடியோ


இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. குரங்குக்கு எப்படி இவ்வளவு புத்திசாலித்தனம் வந்தது என்று வியக்கிறார்கள்! குரங்கின் புத்திசாலித்தனமான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது (Viral Video)


அதிலும், குரங்கு பாட்டிலை இழுக்க முற்படும் போது பாட்டில் தரையில் உருளும் காட்சி அருமை! ஆனால், உன்னை விடமாட்டேன் என்று விடாமுயற்சியை மேற்கொண்டு, இறுதியாக பாட்டில் வென்ற நாயகனாக குளிர்பான விருது பெறுகிறது இந்த புத்திசாலி குரங்கு. 


குரங்கு மூடியைத் திறந்து குடிக்கத் தொடங்குகிறது
பாட்டில் கிடைத்தால் போதுமா? அதை அழகாக திறந்து குடிக்கத் தொடங்குகிறது. குரங்கு குட்டியின் இந்த சேட்டையை பார்த்து சமூக வலைதளங்களில் உள்ள அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர். இதுதான் குரங்கு சேட்டை என்பதா? helicopter_yatra_ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


ALSO READ | பாம்பை வழிமறிக்கும் சுட்டிப் பெண்! பகீர் வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR