சாதனைப் பெண்மணி கோமதி மாரிமுத்துவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

23 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 2 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.


திருச்சி மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த கோமதி, தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார்.


இவருக்கு, பல பிரபலங்கள் தங்களின் பாராட்டுக்களை தெரிவிவ்த்து வருகின்றனர். இந்நிலையில், சாதனைப் பெண்மணி கோமதி மாரிமுத்துவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  அந்த பதிவில், " #AsianAthleticsChampionship2019 - 800 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு #GomathiMarimuthu முதல் தங்கத்தை பெற்றுத் தந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!


தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் உலக அரங்கில் பெருமை தேடித் தந்திருக்கும் இவர் மேலும் பல அரிய சாதனைகளை நிகழ்த்திட வாழ்த்துகிறேன்!" என அவர் குறிப்பிட்டுள்ளார்.