07:29 PM 04-07-2019


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா மாநிலம் கங்காவேலி பகுதியில் சாலையில் உள்ளபள்ளங்களை ஆய்வு செய்ய சென்ற அதிகாரி மீது சேற்றை வாரி ஊற்றிய விவகாரம் தொடர்பாக எம்.எல்.ஏ நிதேஷ் ரானே கைது செய்யப்பட்டார். ரானே மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலருக்கு எதிராக 353, 342, 332, 324, 323, 120 (ஏ), 147, 143, 504, 506 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



மகாராஷ்டிரா மாநிலம் கங்காவேலி பகுதியில் சாலையில் உள்ளபள்ளங்களை ஆய்வு செய்ய சென்ற அதிகாரி மீது உள்ளூர் அரசியல்வாதி சேற்றை வாரி ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!


மகாராஷ்டிரா மாநிலம் கங்காவேலி பாலம் அருகே மும்பை- கோவா சாலையில் உள்ள பள்ளங்களை ஆய்வு செய்வதற்காக நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் பிரகாஷ் சேதேகா சென்றுள்ளார். ஆய்விற்கு சென்ற அவருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ நிதிஷ் ரானே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடைய ஆதரவாளர்களும் அதிகாரியுடன் மோதல் போக்கை மேற்கொண்டுள்ளனர்.


அப்போது அங்கு ஏற்கனவே பக்கெட்களில் தயாராக வைக்கப்பட்டிருந்த சேற்றை கொண்டுவந்து அதிகாரியின் மீது அவரது ஆதரவாளர்கள் ஊற்றியுள்ளனர். இதனையடுத்து அதிகாரியை அவர்கள் பாலத்தில் கட்டி வைக்கவும் முயற்சி செய்துள்ளனர். 



இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அரசு அதிகாரியை பாஜக எம்.எல்.ஏ விஜய் வர்க்கியா கிரிக்கெட் மட்டையால் தாக்கிய சம்பவத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்பொழுது அதே போன்ற மற்றொரு தாக்குதல் சம்பவம் காங்கிரஸ் எம்எல்ஏ-வால் அரங்கேறியுள்ளது. 


இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகள் அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.