நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்த பின், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான திவ்யா ஸ்பந்தனா தனது டிவிட்டர் கணக்கை நீக்கியுள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வந்த, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை திவ்யா ஸ்பந்தனா திடீரென ட்விட்டரிலிருந்து வெளியேறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் ஒரு மாத காலத்திற்கு ஊடக விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார்கள் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் திவ்யா ட்விட்டரிலிருந்து வெளியேறியுள்ளாரா என்பது குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 


1970 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்திரா காந்திக்கு பின் நிதியமைச்சர் பதவி வகிக்கும் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துக்கள் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திவ்யா டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். இந்த சூழலில் அந்த வாழ்த்து டிவீட்க்கு பின்னர், அக்கட்சியின் சமூக ஊடகங்களின் தலைவரான திவ்யா ஸ்பந்தனாவின் டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை சமூக ஊடகங்களில் பெரிய அளவில்கொண்டு சேர்த்த, அவரது டிவிட்டர் பக்கத்தில் “கணக்கு தற்போது இல்லை” என்று மட்டுமே வருகிறது. இதனிடையே காங்கிரஸ் மக்களவை தேர்தலில் அடைந்த தோல்வி காரணமாக அக்கட்சியின் சமூக ஊடகப்பிரிவிலிருந்து, அவர் விலகி விட்டடதாக வெளியான தகவலை திவ்யா மறுத்துள்ளார்.


முன்னதாக ஒரு மாதத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்ற அக்கட்சி தெரிவித்தது. இதன் விளைவாக தான் திவ்யா டிவிட்டர் கணக்கை நீக்கினார் போன்ற தகவல்களும் பரவி வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து வருகிறது.