குக் வித் கோமாளி சிவாங்கியின் இந்த போட்டோ இணையத்தில் வைரல்!
குக் வித் கோமாளி (Cook with Comali) நிகழ்ச்சியில் புகழ்பெற்ற ஒருவரின் பள்ளி பருவ புகைப்பம் இணையத்தில் வைரலாகி வருகிறது
Cook With Comali : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சிவாங்கி, தற்போது அவர் தனது பள்ளி தோழிகளுடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு தனியார் தொலைகாட்சியில் சூப்பர் சிங்கர் (Super Singer) நிகழ்ச்சியில் பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் சிவாங்கி (Sivangi). இவர் இந்த நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை பெற்றுள்ளார். தற்போது இவர் குக் வித் கோமாளி (Cook with Comali) நிகழ்ச்சியில் காமெடியில் கலக்கி வருகிறார். இதில் சிவாங்கி, அஸ்வின் மற்றும் புகழுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகளை ரசிக்க தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளன. இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
ALSO READ | காதலி இல்லாமல் தனது கனவு கதை படப்பிடிப்பை தொடங்கிய விக்னேஷ் சிவன்..!
இதற்கிடையில் கடந்த 2 வாரம் முன்பு இந்த நிகழ்ச்சியில் சிவாங்கி பள்ளி மாணவி போன்று வேடமிட்டு இருந்தார். இந்த கெட்டப் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடிகை சமந்தாவை (Samantha) நினைவூட்டும் வகையில் உள்ளதாக பலர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது சிவாங்கியின் நிஜமான பள்ளிப்பருவத்து போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த போட்டோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோசெய்பவர்கள் எண்ணிக்கை 2.2 மில்லியனாக உயர்ந்துள்ளது. தற்போது இந்த போட்டோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை வாரிகுவித்து வருகிறது.
ALSO READ | சூர்யாவின் 'அஞ்சான்' செய்த அசத்தல் சாதனை....வியப்புல் மக்கள்....
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR