சூர்யாவின் 'அஞ்சான்' செய்த அசத்தல் சாதனை....வியப்புல் மக்கள்....

இந்தியா முழுவதும் ரசிகர்கள் ஒரு சில படத்துக்கு ஒரே மாதிரியாக அமோக ஆதரவையும் சில படங்களுக்கு வெற்றி தோல்வி என மாறியும் தீர்ப்பளிக்கின்றனர். 

Last Updated : Jul 23, 2020, 02:36 PM IST
சூர்யாவின் 'அஞ்சான்' செய்த அசத்தல் சாதனை....வியப்புல் மக்கள்....

தமிழில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத ‘அஞ்சான்’ (ANJAAN) திரைப்படம் ஹிந்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 

‘அஞ்சான்’ (ANJAAN) 2014ம் ஆண்டு வெளிவந்த ஒரு அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை லிங்குசாமி இயக்க, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது. சூர்யா (SURYA) இரட்டை வேடத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து இருந்தார். இவர்களுடன் வித்யூத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.  இத் திரைப்படம் தெலுங்கு மொழியில் "சிகந்தர்" எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. 

 

ALSO READ | இன்னும் மாறாத அரசு பள்ளிகளின் நிலை - வேதனையை வெளிப்படுத்திய நடிகர் சூர்யா

Anjaan Firstlook Posters Wallpapers in HD - Actor Surya Masss Movie First  look Trailers Teaser Songs Posters Stills

இந்த படம் குறித்து பேட்டியளித்த இயக்குனர் லிங்குசாமி ’தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இந்த படத்தில் இறக்கியிருப்பதாக கூறியதும் இந்த படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தமிழில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத ‘அஞ்சான்’ (ANJAAN) திரைப்படத்திற்கு இந்தியில் தற்போது மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. யூட்யூபில் இந்த திரைப்படத்தை 140 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பதும் இந்த திரைப்படத்தை பதிவு செய்த யூடியூப் சேனலுக்கு 40 மில்லியன் புதிய சப்ஸ்கிரபர்கள் கிடைத்துள்ளனர். 

 

 

ALSO READ | Viral: 70 வயது பாட்டியாக வலம்வரும் நடிகை சமந்தா....

தமிழில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத ‘அஞ்சான்’ (ANJAAN)  திரைப்படம் ஹிந்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது பெரும் வியப்பு அளித்துள்ளது.

More Stories

Trending News