1130 கோடியை லாட்டரியில் வென்ற இந்த ஜோடி தங்களுக்காக வாங்கிக்கொண்டது என்ன தெரியுமா?
பிரான்சிசின் தாராள மனதின் காரணமாக, அவரது நண்பர்கள் பலரும் புதிய வீடுகளை வாங்க முடிந்தது. மேலும் பலர் தங்கள் கடன்களையும் திருப்பிச் செலுத்தினர்.
புதுடெல்லி: பிரிட்டனில் வசிக்கும் ஒரு தம்பதி, லாட்டரியில் ஒரு பெரும் தொகையை வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த ஜோடி 1130 கோடி ரூபாய் தொகையை லாட்டரியில் வென்றது. ஆனால் இவ்வளவு பெரிய தொகையை வென்ற பிறகும், இந்த ஜோடி தங்களுக்காக செய்துகொண்ட விஷயம் என்ன என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
ஆம்!! 1130 கோடி ரூபாயை லாட்டரியில் வென்ற தம்பதி, வெற்றிக்கு பிறகு தங்களுக்கென்று வாங்கிக்கொண்டது ஒரு செகண்ட் ஹேண்ட் கார்!! இவர்களது மகள்களும் செகண்ட் ஹேண்ட் கார்களைதான் பயன்படுத்துகிறார்கள். லாட்டரியை வென்ற பிறகு, பிரான்சிஸ் கோனொல்லி தனது 50 நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உதவ முடிவு செய்தார்.
சுமார் 600 கோடி ரூபாயை மக்களுக்கு விநியோகித்தார்
லாட்டரி (Lottery) பணத்தை உபயோகித்து இந்த ஜோடி சுமார் 175 குடும்பங்களுக்கு உதவியுள்ளது. பிரான்சிசின் தாராள மனதின் காரணமாக, அவரது நண்பர்கள் பலரும் புதிய வீடுகளை வாங்க முடிந்தது. மேலும் பலர் தங்கள் கடன்களையும் திருப்பிச் செலுத்தினர்.
லாட்டரி வென்ற சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு, லாட்டரி தொகையில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை (சுமார் 600 கோடி ரூபாய்) மக்களுக்கு உதவியாக வழங்கியதாக பிரான்சிஸ் இங்கிலாந்து (England) ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர் யாருக்கு பணம் கொடுத்தாரோ, அவர்களும் மற்றவர்களுக்கு உதவியுள்ளார்கள். இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக பிரான்சிஸ் கூறினார்.
எனக்காக ஒரு செகண்ட் ஹேண்ட் காரை வாங்கினேன்
பிரான்சிசும் அவரது கணவர் பேட்ரிக்கும் பிரிட்டனின் தி நேஷனல் லாட்டரியின் யூரோ மில்லியன் திட்டத்தின் கீழ் பெரும் தொகையை பெற்றனர். 2019 ஜனவரியில் இந்த ஜோடி வெற்றியாளராக ஆனபோது 25 ஆண்டு வரலாற்றில் லாட்டரியில் வெல்லப்பட்ட நான்காவது மிக அதிக தொகை அவர்களது தொகையாக இருந்தது.
54 வயதான பிரான்சிஸ், நகைகளை வாங்குவதை விட மற்றவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் காண்பதில் தனக்கு அதிக சந்தோஷம் கிடைப்பதாகக் கூறுகிறார். கடந்த ஆண்டு பேட்ரிக் பிரான்சிஸுக்காக 2 லட்சத்தை விட குறைவான விலையில் செகண்ட் ஹேண்ட் ஜாகுவாரை (Jaguar) வாங்கினார்.
ALSO READ: அனுமன் கோயிலுக்கு நிலத்தை நன்கொடையாக அளித்த இஸ்லாமியர்: இணையத்தில் இதயங்களை வெல்கிறார்
எவ்வளவு பணம் இருந்தாலும் போதாது, எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் போதாது என்ற மனப்போக்கு உள்ள இந்த காலத்தில், தங்களுக்கு கிடைத்த இத்தனை பெரிய தொகையை தங்களுக்காக பயன்படுத்திக்கொள்ளாமல், இதில் பெரும் அளவை மற்றவர்களுக்கு அளித்த இந்த தம்பதியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.
நாம் புராணங்களில் படித்த பாரி வள்ளல்களும் கர்ணப் பிரபுக்களும் இன்னும் இந்த கலியுகத்திலும் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!!
ALSO READ: 800 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த டிசம்பரில் வானில் Christmas Star தெரியப் போகிறதா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR