எல்லையில் நடந்தது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே -H ராஜா!
மக்களவைத் தேர்தல் குறித்து அச்சம் கொள்ள வேண்டியது கம்யூனிஸ்ட்டுகள்தானே தவிர பாஜக அல்ல என தமிழக பாஜக தேசிய செயலாளர் H ராஜா தெரிவித்துள்ளார்!
மக்களவைத் தேர்தல் குறித்து அச்சம் கொள்ள வேண்டியது கம்யூனிஸ்ட்டுகள்தானே தவிர பாஜக அல்ல என தமிழக பாஜக தேசிய செயலாளர் H ராஜா தெரிவித்துள்ளார்!
முன்னதாக நேற்று கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், ''தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்னர், போர்ச் சூழலை உண்டாக்கி தேர்தலை நாசப்படுத்த RSS திட்டமிட்டு வருகிறது" என தெரிவித்தார்.
மேலும், மக்களவைத் தேர்தலில் தனது முடிவை பாஜக ஊகித்துவிட்டது. இதன் மூலம் அவசர நிலையை அமல்படுத்தி, தேர்தலை நிறுத்த முயல்கிறது எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியே வான்வழித் தாக்குதலை வரவேற்றுள்ளார். கொடியேறி பாலகிருஷ்ணன் தனது பேச்சு மூலம் தான் ஒரு தகுதியில்லாத அரசியல்வாதி என்பதை நிரூபித்திருக்கிறார்.
எல்லையில் நடந்தது முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மட்டுமே. போரை நாங்கள் வேண்டி விரும்பவில்லை. தேர்தல் அச்சம் கொள்ளவேண்டியது கம்யூனிஸ்ட்டுகள்தானே தவிர பாஜக அல்ல" என குறிப்பிட்டுள்ளார்.