Citi வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ள Paytm நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு முதல் கிரடிட் கார்டுகளை வெளியிடவுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"Paytm First Card" என பெயரிடப்பட்டுள்ள இந்த அட்டைகளுக்கு ஒரு சதவிகித "யூனிவர்சல் அன்லிமிடெட் கேஷ்பேக்(Universal Unlimited Cashback)" சலுகையினையும் அறிமுகம் செய்யவுள்ளது.


மேலும், இந்த கார்டுகளை பெற வாடிக்கையாளர்கள், இவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என எந்த ஒரு நிபந்தனையையும் அந்த நிறுவனம் வெளியிடவில்லை. முன்னதாக இந்த "Paytm First Card"-க்கு 500 ரூபாய் ஆண்டு கட்டணம் அறிவித்திருந்த இந்நிறுவனம், ஒருவேளை வாடிக்கையாளர்களில் ஒரு வருடத்தில் 50,000 ரூபாய்க்கு மேல் பொருட்களை பெற்றால், அந்த ஆண்டு கட்டணத்தை தளர்த்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த கார்டுகளுக்கு விண்ணப்பிக்க வாடிக்கையாளர்கள் நேரடியாகவே பேடிஎம் செயலி மூலமோ விண்ணப்பிக்கலாம். என்றாலும், வாடிக்கையாளர்கள், டிஜிட்டல் உலகின் நடவடிக்கையை வைத்தே இந்த கார்டுகள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. 



அதாவது, அவர்கள் ஆன்லைன் சந்தையில் எவ்வாறு பொருட்களை பெறுகிறார்கள் என்பதை கணக்கில் கொண்டே இந்த கார்டுகள் அவர்களுக்கு அளிக்கப்படும்.


மேலும், இந்த கார்டுகளை பயன்படுத்தி 10,000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குவோருக்கு, 10,000 ரூபாய் வரையில் சலுகைகள் பெற ப்ரோமோ கோட்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.