அன்புள்ள ஹன்விகா என அபியும் நானும் பிரகாஷ் ராஜாக உருகும் கிரிக்கெட்டர் நடராஜன்
![அன்புள்ள ஹன்விகா என அபியும் நானும் பிரகாஷ் ராஜாக உருகும் கிரிக்கெட்டர் நடராஜன் அன்புள்ள ஹன்விகா என அபியும் நானும் பிரகாஷ் ராஜாக உருகும் கிரிக்கெட்டர் நடராஜன்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2021/02/22/184368-natarajan-with-wife.jpg?itok=Zep5nMVD)
தமிழக கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜன் சர்வதேச போட்டிகளில் களமிறங்கி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் பங்கேற்ற முதல் சர்வதேச போட்டியிலேயே அதிரடியாக பந்து வீசி அபார வெற்றியை முத்திரையாக பதித்தார்.
தமிழக கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜன் சர்வதேச போட்டிகளில் களமிறங்கி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் பங்கேற்ற முதல் சர்வதேச போட்டியிலேயே அதிரடியாக பந்து வீசி அபார வெற்றியை முத்திரையாக பதித்தார்.
சிட்னியில் சோனி தொலைக்காட்சியில் நிகழ்ச்சியின் தகவல்களை வழங்கிய முன்னாள் இந்திய வீரர் முரளி கார்த்தி, நடராஜனை அழைத்து அவருடன் தமிழில் பேசினார். "ஆஸ்திரேலியா வந்து இங்கு மிகப்பெரிய அணியுடன் ஆடி முதல் தொடரிலேயே இப்படி வெற்றி பெறுவது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. இதை பற்றி சொல்வதற்கே வார்த்தை இல்லை. ரொம்ப சந்தோசமா இருக்கேன்" என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டுள்ளார் நடராஜன்.
அவர் டிவிட்டரில் பகிர்ந்துள்ள குடும்ப புகைப்படத்துடன் இவ்வாறு எழுதியுள்ளார்: “எங்கள் சிறிய தேவதை ஹன்விகா. எங்கள் வாழ்க்கையின் மிக அழகான குட்டி தேவதை. எங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நீங்கள் தான் காரணம். எங்களை உன்னுடைய பெற்றோராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. நாங்கள் எப்போதும் என்றும் என்றென்றும் உங்களை நேசிக்கிறோம்” என்று தனது பாசத்தை கொட்டியிருக்கிறார்.
Also Read | தனது முதல் T20-ல் கலக்கிய தமிழக வீரர் நடராஜன்
குடும்பமே எல்லாமே, மகளே சிறந்தவள் என்ற ஹேஷ்டேக்குகளையும் நடராஜன் பகிர்ந்துள்ளார். இந்த டிவிட்டர் பதிவு பலராலும் ரசிக்கப்படுகிறது.
நடராஜன் தமிழகத்தின் (Tamil Nadu) சேலம் மாவட்டத்தில் சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர் சில்லி சிக்கன் கடை வைத்துள்ளனர். தாய் சாந்தாவும், தந்தை தங்கராஜும் சில்லி சிக்கன் கடையை நடத்தி வருகின்றனர்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR