ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த முதல் ஒரு நாள் T-20 போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஆஸ்திராலியாவை தோற்கடித்தது.
ஜடேஜாவுக்கு பதிலாக களத்தில் இறங்கிய சஹல் மற்றும் தன் முதல் T-20 ஆட்டத்தில் களம் இறங்கிய தமிழக வீரர் டி. நடராஜன் ஆகியோரின் அதிரடி பந்துவீச்சால் இந்தியா இன்று எளிதாக வெற்றி பெற முடிந்தது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா (Australia) இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தது. சமீபத்தில் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் தனது முதல் ஆட்டத்தை ஆடிய டி.நடராஜனுக்கு அவரது முதல் T-20-க்கான கேப்பை ஜஸ்ப்ரித் பும்ரா வழங்கினார்.
தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மற்றும் கேப்டன் விராட் கோஹ்லி (Virat Kohli) ஆகியோர் முறையே ஒன்று மற்றும் ஒன்பது ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் இந்தியா சுமாரான துவக்கத்தையே பெற்றது.
இன்று இந்தியாவுக்கான பேட்டிங்கைத் துவக்கிய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் நின்று ஆடி அரைசதத்தை அடித்தார். மேலும் அவர் சஞ்சு சாம்சன் (23) உடன் 38 ரன்களை சேர்த்தார்.
கே.எல்.ராகுல் 40 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இதில் ஐந்து பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். அவரை மோய்சிஸ் ஹென்ரிக்ஸ் அவுட் செய்தார்.
இதையடுத்து, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadega) ஆட்டமிழக்காமல் 23 பந்துகளில் 44 ரன்களை எடுத்தார். இதில் அவர் ஐந்து பவுண்டரிகளையும் ஒரு சிக்ஸரையும் அடித்தார். மனீஷ் பாண்டே (2), ஹார்திக் பாண்டே (16) என மற்ற வீரர்களும் அதிக ரன்களை அடிக்கவில்லை. இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுக்கு 161 ரன்களை எடுத்தது.
ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, மொய்சிஸ் ஹென்ரிக்ஸ் 22 ரன்களை கொடுத்து மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். மிட்செல் ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளையும், ஆடம் ஜாம்பா மற்றும் மிட்செல் ஸ்வெப்சன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் இந்தியா ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலை மாற்றியது.
ALSO READ: IND vs AUS T20I: கடந்த 12 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் எந்த தொடரையும் இந்தியா இழக்கவில்லை.
கடைசி ஓவரில் மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் ஹெல்மெட் மீது அடிபட்டதைத் தொடர்ந்து ஜடேஜா தடுமாறினார். அவர் வலியில் இருப்பது நன்றாகத் தெரிந்தது.
ஆரோன் பிஞ்ச் (35), ஸ்டீவ் ஸ்மித் (12), மேத்யூ வேட் (7) ஆகிய மூன்று முக்கியமான விக்கெட்டுகளை சாஹல் வீழ்த்தினார்.
டி.நடராஜன் (T Natarajan) டி'ஆர்சி ஷார்ட் (34), க்ளென் மேக்ஸ்வெல் (2) மற்றும் மிட்செல் ஸ்டார்க் (1) ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருவரது அபார பந்து வீச்சால், ஆஸ்திரேலியா ஏழு விக்கெட் இழப்புக்கு 150 ரன்களையே எடுக்க முடிந்தது.
அபார பந்து வீச்சுக்காக சஹல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது 1-0 என்ற கணக்கில் இந்தியா T-20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (SCG) இரண்டாவது T 20 போட்டி நடக்கவுள்ளது.
ALSO READ: AUS vs IND 3rd ODI: தமிழக வீரர் நடராஜனின் அருமையான ஆட்டம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR